rthdx

Advertisment

மத்திய பிரதேச மாநிலம், உஜ்ஜைன் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் பணியாற்றும் மருத்துவர் ஒருவர், அதே மருத்துவமனையில் வேலை பார்க்கும் பெண் செவிலியருக்கு முத்தமிட்ட குற்றச்சாட்டில் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். மதிய உணவு இடைவேளையின் போது ஆபரேஷன் தியேட்டருக்குள் மருத்துவர் செவிலியரிடம் தகாத முறையில் நடந்து கொண்டதோடு, அதனை வீடியோவும் எடுத்துள்ளார். அந்த வீடியோ தற்பொழுது இணையத்தில் வெளியானதால், அவர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார். விசாரணையின் முடிவில் அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.