Skip to main content

இந்தியாவில் உள்ள 23 போலி பல்கலைக்கழகங்கள்!

Published on 24/07/2019 | Edited on 24/07/2019

 


இந்தியாவில் 23 போலி பல்கலைக்கழகங்கள் இருப்பதாக பல்கலைக்கழக மானியக் குழுவின் (யு.ஜி.சி.) செயலாளர் ரஜினிஷ் ஜெயின் தெரிவித்துள்ளார்.
 
அவர் இது  குறித்து,  ‘’பல்கலைக்கழக மானியக் குழுவின் விதிகளை மீறி அங்கீகாரமற்ற பல்கலைக் கழகங்கள் போலியாக செயல்பட்டு வருகின்றன. இப்போதைக்கு நாட்டில் 23 பல்கலைக்கழகங்கள் அங்கீகாரம் இல்லாமல் பெயரளவுக்கு சுயமாக வடிவமைத்துக் கொண்டு போலியாக செயல்படுகின்றன. மாணவர்கள் இந்த பல்கலைக்கழகங்களில் சேர வேண்டாம் என கேட்டுக்கொள்கிறோம்.

 

u

 

இந்த 23 பல்கலைக்கழகங்களில் அதிகபட்சமாக உத்தரபிரதேச மாநிலத்தில் சம்ஸ்க்ருத விஸ்வ வித்யாலயா, மஹிலா கிராம் விஸ்வ வித்யாலயா, காந்தி ஹிந்தி  வித்யாபீடம், தேசிய எல்க்ட்ரோ காம்பிளக்ஸ் ஹோமியோபதி பல்கலைக்கழகம், நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் திறந்தநிலைப் பல்கலைக்கழகம், உத்தரபிரதேச விஸ்வ வித்யாலயா. மஹராணா பிரதாப் சிக்‌ஷ்நிகேதன் விஸ்வ வித்யாலயா, இந்திரபிரஸ்த  சிக்‌ஷ் பரிஷத் ஆகிய 8 பல்கலைக்கழகங்கள் உள்ளன. இதில் ஒரு பல்கலைக்கழகம் தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது. 

 

அடுத்தபடியாக டெல்லியில் கமர்ஷியல் பல்கலைக்கழக நிறுவனம், யுனைடெட் நேஷனல் பல்கலைக்கழகம், ஏடிஆர் செண்ட்ரிக் ஜூரிடிக்கல் பல்கலை, புது தில்லி இந்திய அறிவியல் மற்றும் பொறியியல் நிறுவனம், விஸ்வகர்மா சுயவேலைவாய்ப்புக்கான திறந்தநிலை பல்கலைக்கழகம், அதியாத்மித் விஸ்வ விதயாலயா  உள்ளிட்ட 7 பல்கலைக்கழகங்களும், மேற்குவங்காளம் மற்றும் ஒடிசாவில் தலா 2 பல்கலைக்கழகங்களும் உள்ளன.

 

நவபாரத் சிக்‌ஷ பரிஷத், வடக்கு ஒடிஸா வேளாண்மை மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகம் என்று ஒடிஷாவில் இரண்டு பல்கலைக்கழகங்களும், இந்திய மாற்று மருந்துக்கான கல்வி நிறுவனம், மாற்று மருந்து மற்றும் ஆராய்ச்சிக் கல்வி நிறுவனம்  என்று மேற்கு வங்கத்தில் இரு பல்கலைக்கழகங்களும், மகாராஷ்டிராவில் ராஜா அரபிக் பல்கலைக்கழகமும் அங்கீகாரமற்றவை என்று தெரிவித்துள்ளார்.

 

மேலும்,   புதுச்சேரியில் உள்ள ஸ்ரீபோதி அகாடமி ஆப் ஹையர் எஜுகேஷன், கர்நாடகாவில் பாதகாவி சர்க்கார் வேர்ல்டு ஓபன் யூனிவர்சிட்டி எஜுகேஷன் சொசைட்டி, கேரளாவில் செயின்ட் ஜான்ஸ் யூனிவர்சிட்டி ஆகியவை அங்கீகாரமற்றவை’’என்று தெரிவித்துள்ளார்.

சார்ந்த செய்திகள்

Next Story

தமிழக அரசின் முடிவுக்கு எதிராக ஆளுநர் கடிதம்

Published on 22/08/2023 | Edited on 22/08/2023

 

Governor's letter against the decision of Tamil Nadu Govt

 

தமிழக உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கடந்த 2021 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 26 அன்று சட்டமன்றத்தில் அறிவித்தபடி, மாணாக்கர்களின் அறிவு, திறன், கற்றல் மற்றும் கற்பித்தல் முறைகளை மேம்படுத்தவும், அவர்களைப் போட்டித் தேர்வுகளுக்குத் தயார்படுத்தவும், தொழில் துறையின் தேவைகளைப் பூர்த்தி செய்யவும், அதன் மூலம் வேலைவாய்ப்புகளைப் பெருக்கவும் உயர்கல்வி நிறுவனங்களின் பாடத்திட்ட மறுசீரமைப்புப் பணி மேற்கொள்ளப்பட்டு, உருவாக்கப்பட்டன. மாதிரிப் பாடத்திட்டங்கள் மாணவர்களின் எதிர்கால நலன் கருதி, மாநிலத்திலுள்ள 90 சதவீத அரசு உயர்கல்வி நிறுவனங்கள் தங்கள் கல்லூரியின் தன்மைக்கேற்ப சில மாற்றங்களுடன் மாதிரிப் பாடத்திட்டங்களை நடைமுறைப்படுத்தியுள்ளன.

 

இதையடுத்து மாதிரிப் பாடத்திட்டத்தின் நோக்கத்தினை விளக்க உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தலைமையில் கடந்த 2 ஆம் தேதி சென்னை, அண்ணா பல்கலைக்கழகத்தில் அனைத்து தன்னாட்சிக் கல்லூரி முதல்வர்களுடன் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது. அக்கூட்டத்தில், இந்த புதிய மாதிரி பாடத்திட்டம் 70 சதவீத தன்னாட்சிக் கல்லூரிகளில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன எனத் தெரிவிக்கப்பட்டது. சில தன்னாட்சிக் கல்லூரிகள், அவர்களது கல்லூரியில் தற்போது கற்பிக்கப்படும் பாடத்திட்டம் சிறப்பாக உள்ளதாகவும், இந்த மாதிரி பாடத்திட்டத்தினை நடைமுறைப்படுத்துவதால் அவர்களது கல்லூரி தன்னாட்சியின் உரிமைக்கு பாதிப்பு ஏற்படும் எனவும் கருதுவதாகக் கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டன. தன்னாட்சிக் கல்லூரிகள் சார்பாகத் தெரிவிக்கப்பட்ட கருத்துகள் உயர்கல்வித்துறை சார்பில் பரிசீலிக்கப்பட்டன. அதன்படி தன்னாட்சிக் கல்லூரிகள் இந்த புதிய மாதிரி பாடத்திட்டத்தினைத் தங்களது கல்லூரிகளில் நடைமுறைப்படுத்திக் கொள்வது குறித்து அவர்களே தங்கள் விருப்பத்திற்கேற்ப முடிவு செய்து கொள்ளலாம் என உயர் கல்வித்துறை முதன்மைச் செயலாளர் தெரிவித்து இருந்தார்.

 

இந்நிலையில் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி, பல்கலைக்கழகங்கள் மற்றும் தனியார் கல்லூரிகளுக்குக் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில் தமிழ்நாடு உயர்கல்வி மன்றம் தயாரித்த மாதிரிப் பாடத்திட்டத்தைப் பின்பற்றத் தேவையில்லை என்றும், கல்வி பொதுப்பட்டியலில் இருப்பதால் பல்கலைக்கழகங்கள் மற்றும் தனியார் கல்லூரிகளுக்கு, பல்கலைக்கழக மானியக் குழு (UGC) தன்னாட்சி அதிகாரம் வழங்கியுள்ள நிலையில் பொதுப் பாடத்திட்டத்தை மாநில அரசு கொண்டுவர முடியாது எனத் தெரிவித்துள்ளார்.

 

 

Next Story

ராகிங்கை தடுக்க கல்லூரிகளுக்கு புதிய கட்டுப்பாடுகள்; யுஜிசி சுற்றறிக்கை

Published on 19/09/2022 | Edited on 19/09/2022

 

New regulations for colleges to prevent ragging; UGC Circular

 

அனைத்து கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களிலும் கண்காணிப்பு கேமிராக்கள் பொருத்த வேண்டும் என பல்கலைக்கழக மானியக்குழு (யுஜிசி) உத்தரவிட்டுள்ளது.

 

கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களில் நடைபெறும் ராகிங் போன்றவற்றை தடுக்க வகுப்பறை மற்றும் விடுதிகளில் கட்டாயம் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த வேண்டும் எனவும் ராகிங் தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக மாணவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் எனவும் யுஜிசி அனைத்து பல்கலைக்கழகத்திற்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. 

 

அதில் குறிப்பிட்டுள்ளதாவது...

ராகிங்கை தடுக்க அனைத்து கல்லூரிகளிலும், விடுதிகளிலும் கண்காணிப்பு கேமிராக்கள் பொருத்த வேண்டும். ராகிங் பற்றிய விழிப்புணர்வை மாணவர்களுக்கு ஏற்படுத்த வேண்டும். அரசின் இணையதளத்தில் அனைத்து மாணவர்களும் பெற்றோர்களும் ராகிங் தடுப்பு உறுதி சான்றை சமர்ப்பிக்க வேண்டும். கல்லூரிகளில் அனைத்து இடங்களிலும் ராகிங் தடுப்பு குறித்தான விழிப்புணர்வு போஸ்டர்களை ஒட்ட வேண்டும். 

 

பேராசிரியர்கள் திடீர் ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும்.ராகிங்கில் ஈடுபட்ட நபர்கள் தண்டிக்கப்பட வேண்டும். அவ்வாறு இல்லையெனில் கல்லூரி நிறுவனங்களின் மீது கடும் நடவடிக்கை பாயும். ராகிங் தடுப்புக்கான தொலைபேசி எண் 18001805522 அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் 24 மணி நேரமும் மாணவர்கள் தங்களது புகார்களை தெரிவிக்கலாம்.