UGC NET Re-exam Date announced

Advertisment

நாட்டின் பல்கலைக்கழகம், கல்லூரிகளில் உதவி பேராசிரியராக பணிபுரியவும், இளநிலை ஆராய்ச்சி படிப்புக்கான மத்திய அரசின் உதவித் தொகையைப் பெறவும் யு.ஜி.சி நெட்(UGC NET) தேர்வில் தேர்ச்சி பெறுவது அவசியம். ஆண்டுதோறும் தேசிய தேர்வுகள் முகமை(என்.டி.ஏ) சார்பில் இரண்டுமுறை நெட் தேர்வு நடைபெறுகிறது.

அந்த வகையில் இந்தாண்டு நெட் தேர்வு முதற்கட்டமாக கடந்த ஜூன் மாதம் நடைபெற்றது. 9 லட்சத்திற்கும் மேற்பட்டோர் தேர்வு எழுதிய நிலையில், இந்த தேர்வை ரத்து செய்து மத்திய கல்வி அமைச்சகம் உத்தரவிட்டது. தேர்வு முறையின் வெளிப்படைத்தன்மை; புனிதத்தை உறுதி செய்யும் நோக்கில் தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. மேலும் கடந்த 25 முதல் 27 வரை நடக்கவிருந்த சி.எஸ்.ஐ.ஆர் யுஜிசி நெட்(CSIR UGC NET)தேர்வு தள்ளிவைக்கப்பட்டது.

இந்த நிலையில்தான் யு.ஜி.சி நெட் மற்றும் சி.எஸ்.ஐ.ஆர் யுஜிசி நெட் ஆகிய தேர்வு நடைபெறும் தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாகத் தேசிய தேர்வுகள் முகமை வெளியிட்டுள்ள அறிக்கையில், யு.ஜி.சி நெட் தேர்வு வரும் ஆகஸ்ட் மாதம் 21 மற்றும் செப்டம்பர் 4 தேதிகளுக்கிடையே நடைபெறும். சி.எஸ்.ஐ.ஆர் யுஜிசி நெட் தேர்வு ஜூலை 25 ஆம் தேதி முதல் 27 ஆம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.