Advertisment

யுஜிசி நெட் தேர்வு ரத்து- மத்திய அரசு அறிவிப்பு

UGC NET Exam Cancellation - Central Govt Notification

Advertisment

யுஜிசி நெட் ஜூன் 2024தேர்வை ரத்து செய்வதாக மத்திய கல்வி அமைச்சகம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

நடைபெற்ற யுஜிசி நெட் 2024 தேர்வில் முறைகேடு நடந்திருக்கலாம் என தேசிய சைபர் கிரைமில் இருந்து யூஜிசிக்கு கிடைத்த தகவல் அடிப்படையில் இந்த முடிவெடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. தேர்வு முறையின் வெளிப்படைத்தன்மை; புனிதத்தை உறுதி செய்யும் நோக்கில் தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் பல்வேறு நகரங்களில் யுஜிசி நெட் 2004 தேர்வு நடைபெற்ற நிலையில் அரசு தற்போது இந்த அறிவிப்பைவெளியிட்டுள்ளது. ஏற்கனவே மருத்துவ துறைக்கான நீட் தேர்வில் முறைகேடுகள் நடைபெற்றதாக நாடு முழுவதும் அரசியல் கட்சிகள் நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், யூஜிசி நெட் 2024 தேர்வவை ரத்து செய்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தகுந்தது.

Cancellation ugc
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe