“என்னுடைய கொள்கை ஹிந்துத்துவாதான், அதை எப்போதும் கைவிடமாட்டேன்”- உத்தவ்தாக்கரே

பெரும் போராட்டத்திற்கு பிறகு மஹாராஷ்டிராவில் சிவசேனா தலைமையில் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கூட்டணி ஆட்சி அமைத்துள்ளது.

uddhav thackeray

இந்நிலையில் சட்டசபையில் எதிர்க்கட்சி தலைவராக தேவேந்திர பட்னாவிஸ் அதிகாரப்பூர்வமாக தேர்ந்தெடுக்கப்பட்டார். அவருக்கு வாழ்த்து தெரிவிக்கும் தீர்மானத்தை முதலமைச்சர் உத்தவ் தாக்கரே சட்டசபையில் கொண்டுவந்தார்.

அப்போது அவர் பேசுகையில், “பட்னாவிஸ் என்னுடைய நண்பர். நாங்கள் நீண்ட காலமாக நல்ல நண்பர்களாக இருந்தோம் என்பதை ஒப்புக்கொள்ள நான் தயங்க மாட்டேன். அவரிடம் இருந்து நிறைய விஷயங்களை கற்றுக்கொண்டேன். எப்போதும் அவருடன் நட்பாக இருப்பேன். அவரை எதிர்க்கட்சி தலைவர் என்று அழைக்க மாட்டேன். அவர் ஒரு பொறுப்பான தலைவர்.

நான் இன்னும் இந்துத்வா சித்தாந்தத்துடன் தான் இருக்கிறேன். அதை ஒருபோதும் விட்டு விட மாட்டேன். கடந்த ஐந்து ஆண்டுகளில், ஒருபோதும் நான் பாஜகவுக்கு துரோகம் செய்யவில்லை.

நான் சட்டசபைக்கு வந்து இருக்கிறேன். பல ஆண்டுகள் எதிர்க்கட்சி வரிசையில் இருந்தவர்கள் ஆட்சி அமைப்பதற்காக என்னுடன் சேர்ந்து விட்டார்கள். அதே நேரம் நண்பர்களாக இருந்தவர்கள் இந்த சபையில் எதிர்க்கட்சி வரிசையில் அமர சென்றுவிட்டனர்.

பா.ஜ.க எங்கள் பேச்சை கேட்டு இணக்கமாக இருந்து இருந்தால், இது எதுவும் நடந்து இருக்காது. இன்று நடப்பதை நான் வீட்டில் இருந்து டி.வி.யில் பார்த்து கொண்டு இருந்து இருப்பேன்.நான் நள்ளிரவில் எதையும் செய்ய மாட்டேன் என இந்த சபைக்கும், மராட்டிய மக்களுக்கும் உறுதி அளிக்கிறேன். மக்களின் நலனுக்காக செயல்படுவேன். விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்வது மட்டும் அல்லாமல், அவர்களின் துயரங்களையும் இந்த அரசு துடைக்கும்” என்றார்.

Maharashtra Uddhav Thackeray
இதையும் படியுங்கள்
Subscribe