Skip to main content

“பெரும் மதக் கலவரம் நிகழலாம்...” - எச்சரிக்கும் உத்தவ் தாக்ரே

Published on 12/09/2023 | Edited on 12/09/2023

 

Uddhav Thackeray warns Major religious riots may happen

 

உத்தரப் பிரதேசத்தில் உள்ள அயோத்தியில் ராமர் கோவில் திறப்பு விழாவின் போது கோத்ரா சம்பவம் போல் கலவரம் நடக்க வாய்ப்புள்ளதாக சிவசேனா கட்சியின் தலைவர் உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார்.

 

கடந்த 2002 ஆம் ஆண்டில் குஜராத் மாநிலத்தில் மோடி தலைமையிலான பா.ஜ.க ஆட்சி நடைபெற்றது. அதில்,பிப்ரவரி 27ஆம் தேதி அயோத்தியில் இருந்து புறப்பட்ட சபர்மதி எக்ஸ்பிரஸ் ரயில், கோத்ரா ரயில் நிலையத்தில் வைத்து சில  மர்மநபர்களால் தீவைத்து எரிக்கப்பட்டது. இந்த சம்பவத்தில் பல பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் குஜராத் மாநிலம் முழுவதும் பெரும் கலவரத்தை தூண்டியது. இதில் மாநிலம் முழுவதும் நூற்றுக்கணக்கான பேர் உயிரிழந்தனர். இதற்கிடையே, மீண்டும் இது போன்ற சம்பவம் நடக்க வாய்ப்புள்ளதாக உத்தவ் தாக்கரே கூறியுள்ளார். 

 

இது குறித்து மஹாராஸ்டிரா மாநிலத்தில் ஜல்கானில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய சிவசேனா (உத்தவ் பிரிவு) கட்சியின் தலைவர் உத்தவ் தாக்கரே,  “2024 ஆம் ஆண்டில் ராமர் கோவில் கட்டி முடிக்கப்பட்டு, அதன் திறப்பு விழாவின் போது மதக்கலவர சம்பவம் நடக்கும் ஆபத்துள்ளது. எனவே, கோத்ரா சம்பவம் பாணியில் மற்றொரு சம்பவம் நடக்காமல் நாம் பார்த்துக்கொள்ள வேண்டும். ராமர் கோவில் திறப்பு விழாவுக்கு பேருந்துகள் மற்றும் லாரிகளில் ஏராளமான மக்கள் கூட்டத்தை அரசு அழைக்கும் வாய்ப்பு உள்ளது. 

 

மேலும், அவர்கள் திரும்பும் பயணத்தில் கோத்ராவில் நடந்ததைப் போன்ற மற்றொரு சம்பவம் நிகழலாம். நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன், 2024ஆம் ஆண்டு ஜனவரியில் ராமர் கோவில் திறக்கப்படலாம்” என்று கூறினார். 

 

 

சார்ந்த செய்திகள்

 

Next Story

நீட் வினாத்தாள் கசிவு; 300 கோடி டார்கெட்; புட்டு புட்டு வைத்த பிஜேந்தர் குப்தா

Published on 25/06/2024 | Edited on 25/06/2024
NEET Question Paper Leak; 300 crore target; Bijendir Gupta who made Pudu Pudu

இளநிலை மருத்துவ படிப்பிற்காக இந்த ஆண்டு நடைபெற்ற நீட் தேர்வில் முறைகேடு நடந்ததாகப் பல புகார்கள் எழுந்தது. அந்த வகையில், நீட் தேர்வின் வினாத்தாள் கசிவு, கருணை மதிப்பெண், 67 பேருக்கு முழு மதிப்பெண்கள், நீட் தேர்வின் போது ஏற்பட்ட குளறுபடிகள், ஆள்மாறாட்டம் செய்து நீட் தேர்வு எழுதியது, ஒரே பயிற்சி மையத்தைச் சேர்ந்த பல மாணவர்கள் நிறைய மதிப்பெண்கள் எடுத்தது எனத் தொடர்ச்சியாக பல்வேறு புகார் மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு வழக்குகள் குவிந்துள்ளன. இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.

நீட்டிற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் வெடித்துள்ள நிலையில் 300 கோடி ரூபாயை இலக்காக வைத்து நீட் மோசடியில் ஒரு கும்பல் ஈடுபட்டது தொடர்பான அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளது. நீட் வினாத்தாள்களை தேர்வு மையங்களுக்கு கொண்டு செல்ல போக்குவரத்து ஒப்பந்தம் எடுக்கும் நிறுவனங்கள் உதவியுடன் வினாத்தாள்கள் திருடப்பட்டது தெரியவந்துள்ளது. 700 மாணவர்களுக்கு நீட் வினாத்தாள் விற்க திட்டமிட்டதாக மோசடி கும்பலைச் சேர்ந்த பிஜேந்தர்  குப்தா என்பவர் வெளியிட்டுள்ள தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாகவே நீட் வினாத்தாள் கசியும் எனப் பிஜேந்தர் குப்தா மார்ச் மாதமே வீடியோ வெளியிட்டு இருந்தார். அந்த வீடியோ தற்போது வைரலானது. போக்குவரத்தின் போது நீட் வினாத்தாள் பெட்டிகள் எப்படி உடைக்கப்படுகின்றன எப்படி கைமாறுகிறது என்பது பற்றியும் வீடியோவும் வெளியாகியிருந்தது. நீட் வினாத்தாள் கசிவில் அரசு அதிகாரிகள் முதல் அச்சகம் வரை தொடர்பு இருக்கும் எனப் பிஜேந்தர் குப்தா தெரிவித்திருந்தார். உத்திரபிரதேசத்தில் தற்போதைய சட்டமன்ற உறுப்பினராக உள்ள பேடி ராம் என்பவரின் உதவியாளராக இருந்த  பிஜேந்தர் குப்தா அவருடைய உதவியுடன் இதனைச் செய்தது தெரியவந்துள்ளது. வினாத்தாள் அடங்கிய பெட்டிகளை சாதுரியமாக உடைத்து அவற்றைத் திருடி விற்று வந்தது தெரியவந்துள்ளது.

Next Story

இரு சமூகங்களிடையே ஏற்பட்ட மோதலால் வன்முறை; 144 உத்தரவு பிறப்பிப்பு!

Published on 22/06/2024 | Edited on 22/06/2024
144 Issuance of Order on incident due to conflict between two communities in rajasthan

ராஜஸ்தான் மாநிலத்தில் இரு சமூகத்தினரிடையே ஏற்பட்ட வன்முறை சம்பவங்களால் ஐந்து காவல் நிலையப் பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

ராஜஸ்தான் மாநிலம், ஜோத்பூர் மாவட்டத்தில் இரு சமூகங்களிடையே நீண்ட நாட்களாக மோதல் போக்கு இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், நேற்று(21-06-24) திடீரென்று, அவர்கள் ஒன்று திரண்டு ஒருவரையொருவர் செங்கல் மற்றும் கற்களால் தாக்கிக் கொண்டனர். மேலும், அந்தப் பகுதியில் உள்ள கடைகள் மற்றும் வாகனங்கள் மீது தீ வைத்து எரித்தனர். 

இந்தச் சம்பவம் குறித்து தகவல் அறிந்து போலீசார் அங்கு சென்ற போது, அவர்களையும் மர்மநபர்கள் தாக்கியுள்ளனர். இதனால் அந்தப் பகுதி முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு கூடுதல் போலீசார் வரவழைக்கப்பட்டு நிலைமை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. மேலும், போலீசாரை தாக்கியதற்காகவும், கலவரத்தை தூண்டியதாகவும் பலரையும் போலீசார் கைது செய்துள்ளனர். இதனைத் தொடர்ந்து, அங்குள்ள ஐந்து காவல் நிலைய பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், சில இடங்களில் பதற்றம் நிலவி வருகிறது.