பிரதமர் மோடியின் கனவு திட்டத்திற்கு உத்தவ் தாக்கரே போட்ட முட்டுக்கட்டை... பொதுமக்கள் வரவேற்பு...

பிரதமர் மோடியின் கனவு திட்டங்களில் ஒன்றாக கூறப்படும் மும்பை புல்லட் ரயில் திட்டம் தற்காலிமாக நிறுத்தப்படுவதாக மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே அறிவித்துள்ளார்.

uddhav thackeray halts mumbai bullet train plan

மும்பை- அகமதாபாத் இடையே, பயண நேரத்தை குறைக்கும் வகையில், புல்லட் ரயில் திட்டத்தை குஜராத் தேர்தலின் போது பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார். நாட்டின் முதல் புல்லட் ரயில் திட்டமா இதனை ஜப்பான் மற்றும் பன்னாட்டு நிதி முகமை உதவியுடன் 1.1 லட்சம் கோடி ரூபாய் செலவில் அமைக்க திட்டமிடப்பட்டது. தற்போது இந்த திட்டத்திற்கு மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே தற்காலிக தடை விதித்துள்ளார்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், மும்பை- அகமதாபாத் இடையே சிறப்பு ரயில் திட்டம் தற்காலிகமாக நிறுத்தப்படுவதாகவும், திட்ட மதிப்பீடு, அதில் உள்ள நெருக்கடிகள், காலக்கெடு ஆகிய அனைத்து அம்சங்களையும் மறு ஆய்வுக்கு உட்படுத்த உள்ளதாகவும் தெரிவித்தார். அதுவரை இந்த திட்டம் நிறுத்திவைக்கப்பட உள்ளது என தெரிவித்துள்ளார். புல்லட் ரயில் திட்டத்திற்காக நிலங்கள் கையகப்படுத்துவதற்கு எதிராக, விவசாய மற்றும் தன்னார்வ அமைப்புகள் தொடர் போராட்டம் நடத்தி வந்த நிலையில், இத்திட்டத்தை நிறுத்திவைத்துள்ளார் தாக்கரே. உத்தவ் தாக்கரேவின் இந்த முடிவுக்கு பொதுமக்கள் பரவலாக வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

bullet train Maharashtra modi Uddhav Thackeray
இதையும் படியுங்கள்
Subscribe