Advertisment

மோடிக்கு போன் போட்ட உத்தவ் தாக்கரே... முதல்வர் பதவி தப்புமா..?

f

சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரேவின் முதல்வர் பதவி நீடிக்குமா என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது. மராட்டியத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தேர்தல் நடைபெற்றது. பாஜகவுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்த சிவசேனா தேர்தல் முடிவுக்கு பிறகு முதல்வர் பதவி கேட்டதால் இரண்டு கட்சிகளுக்கு இடையே பிணக்கு ஏற்பட்டது. இதனால் கடும் அதிருப்தி அடைந்த பாஜக தேசியவாத காங்கிரஸின் அஜித் பவார் ஆதரவுடன் ஆட்சி அமைத்து,பிறகு அது பெரும்பான்மையை நிரூபிக்க முடியாமல் போகவே மீண்டு காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், சிவசேனா முதலிய கட்சிகள் கூட்டணி அமைத்து ஆட்சி அமைத்தார்கள். சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே முதல்வராக இருந்து வருகிறார்.

அவர் சட்டமன்ற உறுப்பினராக இல்லாத காரணத்தால் அவர் பதவியேற்ற ஆறு மாதத்திற்குள் சட்டப்பேரவை உறுப்பினராக தேர்ந்தெடுத்தப்பட வேண்டும். தற்போதைய கரோனா சூழ்நிலையில் அதற்கான வாய்ப்பில்லாத நிலையில், சட்ட மேலவை நியமன உறுப்பினர் ஆவதற்கு உத்தவ் தாக்கரே முயற்சி செய்தார். அதன்படி அமைச்சரவையை கூட்டி ஆளுநருக்கு பரிந்துரை கடிதம் வழங்கினார். இருந்தாலும் ஆளுநர் இந்த கடிதம் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. சிவசேனா மீது கோபத்தில் இருக்கும் பாஜக, ஆளுநரை வைத்து விளையாட்டை ஆட நினைக்கின்றதோ என்று நினைத்த தாக்கரே, தொலைபேசி வாயிலாக மோடியிடம் சட்ட மேலவை உறுப்பினர் ஆவதற்கு வழி செய்யுங்கள் என்று கோரிக்கை விடுத்திருந்தார். வரும் 28ம் தேதி உடன் முதல்வர் பதவியேற்று 6 மாதம் காலம் நிறைவடைய உள்ள நிலையில் ராஜினமா செய்யும் நிலைய வந்தால் அதற்காக வருத்தப்பட போவதில்லை என்றும் உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

Advertisment
modi
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe