Advertisment

“நான் அரசியல் பேச விரும்பவில்லை” மும்பை முதல்வர் உத்தவ் தாக்கரே

uddhav thackeray about corona and politics

கரோனா தொற்று பரவல் அதிகரிப்பு, நடிகை கங்கனாரனாவாத்தின் மும்பை அலுவலகம் இடிப்பு ஆகியவை மும்மையில் பெறும் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் மும்பை முதல்வர் உத்தவ் தாக்கரே தொலைக்காட்சி மூலம் உரையாற்றினார்.

Advertisment

அதில், “மகாராஷ்டிராவில் வெள்ளம், புயல், கரோனா என அனைத்து பிரச்சனைகளையும் என்னுடைய அரசு சிறப்பாக கையாண்டு வருகிறது. அதோடு அரசியல் ரீதியான புயலையும் மக்களின் ஆதரவோடு சமாளிப்பேன். என்னுடைய குடும்பம், என்னுடைய பொறுப்பு என்ற வகையில் நம்முடைய பொறுப்புகளை கரோனா காலத்தில் பகிர்ந்து கொள்ள வேண்டும். நான் அரசியல் பேச விரும்பவில்லை இருந்தும் மகாராஷ்ட்ராவின் பெயருக்கு சிலர் களங்கம் விளைவிக்க முயற்சி செய்கின்றனர். இயற்கையாக உருவாகும், செயற்கையாக உருவாக்கப்படும் அனைத்துப்பிரச் சனைகளையும் நான் எதிர்கொள்வேன். என் அமைதியை பலவீனமாக கருதாதீர்கள் மேலும் என்னிடம் பதில் இல்லை எனவும் நினைக்காதீர்கள். மக்கள் தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள், முகக்கவசம் அணியுங்கள் கரோனாவிலிருந்து பாதுகாத்துக் கொள்ளலாம்” என்று தெரிவித்தார்.

Advertisment

Mumbai Uddhav Thackeray
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe