நாடாளுமன்றத்தில் குடியுரிமை திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட்டு இரண்டு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டது. எதிர்கட்சிகளின் கடும் எதிர்ப்பையும் மீறி இந்த மசோதா சட்டமாக்கப்பட்டது.

Advertisment

uddhav thackeray about caa in maharashtra

இதுதொடர்பாக பல்வேறு சர்ச்சைகள் எழுந்துள்ள நிலையில், டெல்லி உள்ளிட்ட நாட்டின் பல முக்கிய பகுதிகளிலும் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் நேற்று மஹாராஷ்டிராவில் நடைபெற்ற போராட்டங்களில் சில இடங்களில் வன்முறை ஏற்பட்டது.

Advertisment

இந்நிலையில் இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய மகாராஷ்டிரா மாநில முதல்வர் உத்தவ் தாக்கரே, "எந்தவொரு சமூகத்தையோ அல்லது மதத்தையோ சேர்ந்த மக்களின் உரிமைகள் மீறப்படுவதற்கு மராட்டிய அரசு ஒரு போதும் அனுமதிக்காது. போராட விரும்புபவர்கள் அமைதியான முறையில் போராட வேண்டும். என்னை கூட நேரில் சந்தித்து பேசலாம். எந்தவொரு சம்பவமும் மாநிலத்திற்கு களங்கமாக இருக்கக்கூடாது.

குடியுரிமை சட்டம் நிறைவேற்றப்பட்ட பிறகும் யாரையும் நாட்டை விட்டு வெளியேற்ற மாட்டோம். இது தொடர்பாக யாரும் பயப்பட தேவையில்லை. குடியுரிமை திருத்த சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு தொடர்பாக அதிகளவில் தவறான புரிதல் உள்ளது. குடியுரிமை திருத்த சட்டம் சட்டப்பூர்வமானதா? என்பது குறித்து உச்சநீதிமன்றம் இன்னும் முடிவு செய்யவில்லை. எனவே மக்கள் அமைதியை கடைபிடிக்க வேண்டும்" என கேட்டுக்கொண்டுள்ளார்.

Advertisment