அயோத்தியில் சர்ச்சைக்குரிய 2.7 ஏக்கர் நிலம் யாருக்குச் சொந்தம் என்பது தொடர்பான தீர்ப்பை உச்சநீதிமன்ற தலைமைநீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான 5 பேர் கொண்ட அமர்வு வழங்கியுள்ளது.

Advertisment

Uddhav Thackeray about ayodhya verdict

இந்த தீர்ப்பின்படி, வக்பு வாரியத்திற்கு அவர்கள் விரும்பும் இடத்தில் 5 ஏக்கர் நிலம் வழங்க வேண்டும் எனவும், வழக்குக்கு உட்படுத்தப்பட்ட இடத்தில் ராமர் கோவில் கட்டுவதற்கான அமைப்பை அடுத்த 3 மாதத்தில் மத்திய அரசு ஏற்படுத்த வேண்டுமெனவும் தெரிவித்துள்ளது. இந்நிலையில் இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள சிவசேனா தலைவர் உத்தவ் தாக்ரே, "இன்றைய நாள் இந்திய வரலாற்றில் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்படும். தீர்ப்பை அனைவருமே ஏற்றுக்கொண்டுள்ளனர். நான் நவம்பர் 24 அன்று அயோத்திக்குச் செல்வேன். மேலும் எல்.கே. அத்வானியை நேரில் சந்தித்து நன்றி தெரிவிக்க உள்ளேன். ராமர் கோவிலுக்காக ரத யாத்திரை மேற்கொண்டவர் அவர்தான். நான் நிச்சயமாக அவரைச் சந்திப்பேன்" என தெரிவித்துள்ளார்.