மஹாராஷ்டிரா மாநில முதல்வராக உத்தவ் தாக்கரே இன்று பொறுப்பேற்றுக்கொண்டார்.

uddhav thackarey takes charge as cm of maharashtra

Advertisment

Advertisment

மும்பை சிவாஜி பூங்கா மைதானத்தில் நேற்று நடைபெற்ற பதவியேற்பு விழாவில் ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரி, உத்தவ் தாக்கரேவுக்கு பதவிப்பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். பதவியேற்றவுடன் பொதுமக்கள் முன்னிலையில் தரையில் விழுந்து வணங்கினார். இதைத் தொடர்ந்து 3 கட்சிகள் சார்பிலும் தலா 2 பேர் மந்திரிகளாக பதவி ஏற்றனர். சிவசேனாவின் ஏக்நாத் ஷிண்டே, சுபாஷ் தேசாய், தேசியவாத காங்கிரசின் ஜெயந்த் பாட்டீல், சகன் புஜ்பால், காங்கிரசின் பாலசாகேப் தோரட், நிதின் ராவத் ஆகியோர் மந்திரிகளாக பதவி ஏற்று கொண்டனர். இந்நிலையில், உத்தவ் தாக்கரே இன்று முறைப்படி முதல்வர் அலுவலகத்திற்கு சென்று அங்கு முதல்வராக பொறுப்பேற்றுக்கொண்டார். பெண்கள் ஆரத்தி எடுத்து அவரை வரவேற்றனர். மற்ற உறுப்பினர்கள் பூங்கொத்து உள்ளிட்ட பரிசுகளை கொடுத்து வாழ்த்துகளை தெரிவித்தனர். அதன்பின் தனது இருக்கைக்கு சென்ற அவர், அதற்கு வணக்கம் செலுத்தி பொறுப்பினை ஏற்று கொண்டார்.