ADVERTISEMENT

நான் செய்தது குற்றம் என்றால்.. அதனை திரும்பவும் செய்வேன்... உத்தவ் தாக்கரே அதிரடி...

03:35 PM Nov 30, 2019 | kirubahar@nakk…

மும்பை சிவாஜி பூங்கா மைதானத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற பதவியேற்பு விழாவில் மகாராஷ்டிரா முதல்வராக பதவியேற்றுக்கொண்ட உத்தவ் தாக்கரே, மன்னர் சிவாஜி பெயரிலும், அவரது பெற்றோர் பெயரிலும் பதவி பிரமாணம் எடுத்துக்கொண்டார்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

இதனையடுத்து உத்தவ் தாக்கரே நேற்று முறைப்படி முதல்வர் அலுவலகத்திற்கு சென்று அங்கு முதல்வராக பொறுப்பேற்றுக்கொண்டார். இதனை தொடர்ந்து இன்று நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பிலும், 169 பேரின் ஆதரவுடன் பெரும்பான்மையை நிரூபித்தது உத்தவ் தாக்கரே தலைமையிலான அரசு. இந்த சிறப்பு கூட்டத்தில் தங்களுக்கு முறையான அழைப்பு விடுக்கப்படவில்லை என கூறி அமளியில் ஈடுபட்ட பாஜகவினர் நம்பிக்கை வாக்கெடுப்புக்கு முன்னரே கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.

இந்நிலையில் சிவாஜி பெயரிலும், அவரது பெற்றோர் பெயரிலும் சத்திய பிரமாணம் எடுத்துக்கொண்டது பற்றி பாஜகவினர் சிலர் விமர்சித்திருந்த நிலையில், இதுகுறித்து பேசிய உத்தவ் தாக்கரே, "ஆம், நான் சத்ரபதி சிவாஜி மன்னர் பெயரிலும் எனது பெற்றோரின் பெயரிலும் சத்திய பிரமாணம் செய்தேன். இது ஒரு குற்றம் என்றால் நான் அதை மீண்டும் செய்வேன்" என்றார்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT