/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/WDQW.jpg)
ஓலா, உபேர் ஆகிய தளங்கள் மூலம் வாகனங்களைபுக் செய்து பயணிப்போரின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில்,உபேர் நிறுவனம் வாட்ஸ்அப் மூலமாகவேவாகனத்தை புக் செய்யும் வசதியை அறிமுப்படுத்தவுள்ளது. இதன்மூலம் இனி வாட்ஸ்அப் எண்ணுக்கு குறுஞ்செய்தி அனுப்புவதன்மூலமேவாகனத்தை புக் செய்யலாம்.
இந்த வசதி முதலில், சோதனை முயற்சியாக லக்னோவில் தொடங்கப்படுகிறது. அதன்பின்னர் மற்ற நகரங்களுக்கும் விரிவு செய்யப்படவுள்ளது. இந்த சேவை அமலுக்கு வரும்போது வாகனங்களை புக் செய்ய செயலிகளை பதிவிறக்கம் செய்ய வேண்டிய அவசியம் இருக்காது.
வாகனம் எப்போது வந்து சேரும், ஓட்டுனரின்பெயர், அவரது எண் போன்றவற்றையும் வாட்ஸ்அப் மூலமேஅறியலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் செயலி மூலமாக வாகனங்களை புக் செய்யபவர்கள் பெறும் பாதுகாப்பு அம்சங்கள் மற்றும்காப்பீட்டுப் பாதுகாப்புகளை வாட்ஸ்அப் மூலம் புக் செய்பவர்களும் பெறுவார்கள் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)