சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவோர் மீது தண்டனையை வலுப்படுத்துவதற்கான உபா சட்ட திருத்தம் மாநிலங்களவையில் நிறைவேறியது.

Advertisment

rajyasabha

பயங்கரவாத செயல்களில் ஈடுபடும் தனி நபர்களை பயங்கரவாதி என அறிவித்து அவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்கப்படும் வகையில் இந்த சட்ட திருத்தும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மக்களவையில் எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கு இடையே இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்ட நிலையில், தற்போது மாநிலங்களவையில் இந்த சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது.

மாநிலங்களவையிலும் எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. ஆனால் இதற்கான வாக்கெடுப்புக்கு நடத்தப்பட்ட போது மசோதாவுக்கு ஆதரவாக 147 வாக்குகளும் எதிராக 42 வாக்குகளும் விழுந்தன. இதையடுத்து இந்த மசோதா மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டது.