ஒரு சேலைக்கு அடித்துக்கொண்ட இரு பெண்கள்; களேபரத்திலும் சூடுபிடித்த தள்ளுபடி விற்பனை

 Two women fight over a saree; discount sale

துணிக்கடையில் ஒரு சேலைக்கு இரண்டு பெண்கள் அடித்துக் கொள்ளும் வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

கர்நாடக தலைநகர் பெங்களூருவின்மல்லேஸ்வரம் பகுதியில் கர்நாடக பட்டு தொழிற்சாலை நிறுவனம் சார்பில் தள்ளுபடியில் சேலை விற்பனை துவங்கியது. இதனால் அங்கு பெண்கள் கூட்டம் அலைமோதியது. பட்டு சேலைகளும் தள்ளுபடி விலையில் விற்கப்பட்டதால் பரபரப்பாக காணப்பட்டது அந்த விற்பனை நிலையம். அப்பொழுது ஒரே சேலையை இரண்டு பெண்கள் எடுத்ததாக கூறப்படுகிறது.

அப்பொழுது லேசாக ஏற்பட்ட வாய் தகராறு குடுமியை பிடித்துக்கொண்டு இருவரும்சண்டையிடும் அளவிற்கு முற்றியது. ஒருவரை ஒருவர் கண்மூடித்தனமாக தாக்கிக்கொண்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இருப்பினும் மறுபுறம் மற்ற பெண்கள் இதனையெல்லாம் பொருட்படுத்தாமல் சேலையை ஆர்வமாக தேர்ந்தெடுத்து வாங்குவதில் முனைப்பாக இருந்தனர். இது தொடர்பான வீடியோ காட்சிகள் தற்பொழுது இணையத்தில் வைரலாகி வருகிறது.

karnataka offcer Women
இதையும் படியுங்கள்
Subscribe