Advertisment

நள்ளிரவில் தீப்பிடித்து எரிந்த இருசக்கர வாகனம் 

A two-wheeler caught fire in the middle of the night

புதுச்சேரி, இந்திராகாந்தி சிக்னல் அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரு சக்கர வாகனம் ஒன்று நள்ளிரவு திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதனைகண்டு அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் ரெட்டியார்பாளையம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்ததர். அதையடுத்து காவல்துறையினர் விரைந்து வந்து அருகில் இருந்த தண்ணீரை ஊற்றி தீயை அணைக்க முயற்சி செய்தனர். ஆனால் தீ கட்டுக்கடங்காமல் தொடர்ந்து எரிந்ததால் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டு தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர். இருப்பினும் இரண்டு சக்கர வாகனம் தீயில் முற்றிலுமாக கருகி நாசமாகியது.

Advertisment

எரிந்த வாகனத்தின் அருகே 20-க்கும் மேற்பட்ட வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில் தீ விரைந்து அணைக்கப்பட்டதால் பெரும் சேதங்கள் தவிர்க்கப்பட்டது. மேலும் நள்ளிரவில் நின்று கொண்டிருந்த இரண்டு சக்கர வாகனம் திடீரென தீப்பிடித்து எறிந்தது காவல்துறையினருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. யாரேனும் தீயிட்டு கொளுத்தினார்களா அல்லது வேறு ஏதேனும் காரணமா எனபல்வேறு கோணங்களில் ரெட்டியார்பாளையம் காவல் துறையினர் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.

Advertisment

Pondicherry
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe