மேற்கு வங்காள மாநிலத்தில் உள்ள மிட்னாபூர் கிராமத்தில் பாம்புகள் நடமாட்டம் எப்போதும் அதிகம் இருக்கும். அந்தவகையில் இரண்டு தலைகள் உடைய நல்லபாம்பு ஒன்று நேற்று அந்த கிராமத்திற்கு வந்துள்ளது. இதை கண்ட பொதுமக்கள் அதனை வணங்க ஆரம்பித்தனர். அதற்கு பால் மற்றும் முட்டைகளை கொடுத்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த வந்த வனத்துறையினர் பாம்பை மீட்க முயன்றனர். இந்நிலையில், இரண்டு தலை உடைய நாகம் தெய்வ சக்தி உடையது எனக் கூறி பாம்பை வனத்துறையினரிடம் தர மறுத்துள்ளனர்.

Advertisment

fk

இதனால் அதிர்ச்சி அடைந்த வனத்துறையினர், அவர்களிடம் போராடி பாம்பை மீட்டுள்ளனர். மேலும், பாம்பிற்கு இரட்டை தலை இருப்பது பற்றி அவர்களிடம் கேட்டபோது, " இது மனிதர்களுக்கு உள்ளதை போன்று பாம்பிற்கு ஏற்பட்டுள்ள உடலியல் சார்ந்த பிரச்சனை தான். இதற்கும் கடவுளுக்கும் சம்பந்தமில்லை. இந்த வகை பாம்புகளை வெளியில் நடமாட விடுவதை விட காப்பகத்தில் வைத்தால் அதன் ஆயுட்காலத்தை சில ஆண்டுகள் அதிகரிக்கலாம்" என்று அவர் தெரிவித்துள்ளார்.