puneetH rajkumar

Advertisment

கன்னட சினிமா நட்சத்திரமானபுனித் ராஜ்குமாருக்கு நேற்று (29.10.2021) காலை மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்துமருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி காலமானார். இதனால் புனித் ராஜ்குமாரின்ரசிகர்களும், திரையுலகினரும் அதிர்ச்சியடைந்தனர்.

திரையுலகைச் சேர்ந்தவர்கள் முதல் அரசியல் தலைவர்கள் வரை புனித் ராஜ்குமாரின்மறைவுக்கு இரங்கல் தெரிவித்துவருகின்றனர். மேலும், அவரது உடலுக்கு ஏராளமான ரசிகர்கள் அஞ்சலி செலுத்திவருகின்றனர். புனித் ராஜ்குமாரின்உடல் அரசு மரியாதையோடுஅடக்கம் செய்யப்படவுள்ளது.

இந்தநிலையில், புனித் ராஜ்குமார் மறைந்த அதிர்ச்சியைத் தாங்க முடியாமல், அவரது ரசிகர்கள் இருவர் மாரடைப்பால் உயிரிழந்துள்ளனர். அதேபோல், புனித் ராஜ்குமாரின்ரசிகரானராகுல் என்ற இளைஞர் தற்கொலை செய்துகொண்டுள்ளார். தனதுவீட்டில் இருந்த புனித் ராஜ்குமாரின்உருவப்படத்திற்கு மலர்களால் அஞ்சலி செலுத்திவிட்டு அவர் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

Advertisment

இதனைத்தவிரசதீஷ் என்ற மற்றொரு ரசிகர், புனித் ராஜ்குமார் மறைந்த வேதனை தாங்காமல், தனது உள்ளங்கையை நசுக்கிகொண்டுள்ளார்.