Advertisment

பாட்டு கச்சேரி எங்கே..? திருமண வீட்டில் நடந்த களேபரம்!

தெலங்கானா மாநிலம் சூரிய பேட்டையில் உள்ள தெராய் என்னும் கிராமத்தில் நேற்று மாலை திருமண அழைப்பு ஒன்று நடைபெற்றது. இதில் மாப்பிள்ளை ஊர்வலம் அழைப்பிற்கான ஏற்பாடுகளை பெண் வீட்டார் செய்திருந்தனர். ஆனால் மாப்பிள்ளை அழைப்பிற்காக பாட்டு கச்சேரி ஏற்பாடு செய்யவில்லை என போதையில் இருந்த மாப்பிள்ளை வீட்டார் பெண் வீட்டாரிடம் சண்டை போட்டனர்.

Advertisment
Advertisment

தொடர்ந்து நடைபெற்ற சண்டையில் ஆண், பெண் வித்தியாசம் இன்றி இரு தரப்பினரும் கடுமையாக மோதிக்கொண்டனர்.இதில் கையில் கிடைத்த சமையல் பாத்திரங்கள், நாற்காலிகள் ஆகியவற்றை கொண்டு ஒருவரை, ஒருவர் தாக்கியதில், பலருக்கு ரத்த காயம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அவர்கள் அனைவரும் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை எடுத்து வருகின்றனராம். தொடர்ந்து கிராம பெரியவர்கள் தலையிட்டு இரு தரப்பினரையும் சமாதானம் செய்து வைத்ததாக கூறப்படுகிறது. இந்த அடிதடி சம்பவத்தின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

telangana
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe