/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/993_234.jpg)
ராஜஸ்தானில் இரண்டு அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ராஜஸ்தான் மாநிலத்தில் விரைவில் சட்டசபைத்தேர்தல் வரவுள்ள நிலையில், அடுத்தடுத்து அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.அந்தவகையில், கடந்த 30 ஆம் தேதி மாநிலத்தில் 30க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தினர். அப்போது ஏலச் சீட்டு மோசடி விவகாரத்தில் குற்றவாளியைக் கைது செய்யாமல் இருக்கஅமலாக்கத்துறை அதிகாரிகள் இரண்டு பேர் ரூ.17 லட்சம் லஞ்சம் கேட்டுள்ளனர். ஆனால் ரூ. 15 லட்சம் தான் கொடுக்க முடியும் என்று குற்றவாளி கூறியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து ரூ.15 லட்சம் பணத்தை வாங்கியபோது அமலாக்கத்துறை அதிகாரிகள் இரண்டு பேரையும் கையும் களவுமாக ராஜஸ்தான் லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்துள்ளனர். சோதனைக்குச் சென்ற அமலாக்கத்துறை அதிகாரிகள் லஞ்சம் வாங்கி போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)