லாரியில் ஏற்றி அழைத்து செல்லப்பட்ட இரண்டு குட்டி யானைகள் அருகில் வந்த வாகனத்தில் இருந்த கரும்பு கட்டுக்களை லாவகமாக சாப்பிட்ட சம்பவம் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்திய வனத்துறை அதிகாரியான சுஷாந்தா நந்தா விலங்குகள் தொடர்பான சுவாரசிய வீடியோக்களை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் அடிக்கடி பகிர்ந்து வருவார். இற்போது அவர் வெளியிட்டுள்ள ஒரு வீடியோவில் இரண்டு யானைகள் செய்யும் சேட்டைகள் இடம்பெற்றுள்ளது.

Advertisment

அந்த வீடியோவில் இரண்டு யானைகள் லாரியில் ஏற்றப்பட்ட நிலையில், சிக்னலில் நின்றுகொண்டிருந்தது. அப்போது அருகில் கரும்பு கட்டுக்களை ஏற்றிக்கொண்டு இரண்டு வாகனங்கள் சிக்னல் விழுவதற்காக யானைகளுக்கு அருகில் நிற்க, அதில் இருந்த கரும்புகளை யானைகள் ஒன்றன்பின் ஒன்றாக சாப்பிட ஆரம்பித்தன. இந்த காட்சிகளை அருகில் இருந்த ஒருவர் செல்போனில் வீடியோ எடுத்து இணையத்தில் பதிவேற்றம் செய்துள்ளார். தற்போது இந்த காட்சிகள் வைரலாகி வருகின்றது.