Advertisment

மும்பையில் இரண்டு நாள் 144 தடை... 'ஒமிக்ரான்' பரவலால் வெளியான உத்தரவு!

 Two day 144 ... Order issued for 'Omigron' spread!

கடந்த இரண்டு வருடங்களாகவே உலக அளவில் மிகப் பெரும் பேசுபொருளாக இருக்கிறது கரோனா. தற்போது வரை உலக நாடுகள் கரோனா பாதிப்புக்கு எதிராகத் தடுப்பூசிகளை செலுத்தி போராடிவருகிறது. தற்போது புதிதாக 'ஒமிக்ரான்' என்ற வைரஸ் பரவலால் மீண்டும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட வேண்டிய நிலையை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறது.

Advertisment

இந்நிலையில், 'ஒமிக்ரான்' தொற்று பாதிப்பு காரணமாக மும்பையில் இரண்டு நாட்களுக்கு 144 தடை விதிக்கப்பட்டுள்ளது. இதுவரை இந்தியாவில் 32 பேருக்கு 'ஒமிக்ரான்' கரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டிருக்கிறது. மும்பையில் மூன்று பேருக்கும் தொற்று உறுதிசெய்யப்பட்ட நிலையில், இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மும்பை நகருக்கு மட்டும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும், மஹாராஷ்ட்ரா மாநிலத்தில்தான் 'ஒமிக்ரான்' பாதிப்பு என்பது மிகவும் அதிகமாக உள்ளது. இதுவரை 17 பேருக்கு அங்கு'ஒமிக்ரான்' உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த கரோனா முதல் மற்றும் இரண்டாம் அலை என இரண்டு அலையிலும் மஹாராஷ்ட்ராவில் அதிக பாதிப்பு இருந்த நிலையில், தற்போது'ஒமிக்ரான்' பரவல் தொடர்பாக மும்பைக்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Advertisment

Maharashtra Mumbai OMICRON
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe