Advertisment

திருமணம் செய்யப்போகும் காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள்...

உத்திரப் பிரதேசம் மாநிலத்திலுள்ள ரேபரேலி தொகுதியில் கடந்த 2017ஆம் ஆண்டு காங்கிரஸ் சார்பாக போட்டியிட்டு 90,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று எம்.எல்.ஏ. ஆனவர் பெண் வேட்பாளர் அதிதி சிங்.

Advertisment

congress mlas

ஒருமுறை ராகுல் காந்தி பரப்புரை செய்தபோது அவருடன் அதிதி சிங் எடுத்துக்கொண்ட புகைப்படத்தின் வாயிலாக பிரபலமடைந்தவர். இந்நிலையில் இவர் பஞ்சாபை சேர்ந்த எம்.எல்.ஏ அங்கத் சைனியை வருகிற 21ஆம் தேதி டெல்லியில் திருமணம் செய்துகொள்கிறார். இவர்கள் இருவருக்கும் கடந்த வருடமே நிச்சயம் செய்யப்பட்டுவிட்டது.

பிரியங்கா காந்திக்கு மிகவும் நெருக்கமானவரான அதி‌தி சிங், பல சர்ச்சைக்குரிய சம்பவங்களால் பிரபலமடைந்தார். காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் சட்டப்பிரிவு 370ஐ நீக்கியதற்கு அதிதி சிங் ஆதரவு தெரிவித்தார்.

congress
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe