புதுச்சேரியில் அரசு இட ஒதுக்கீட்டில் மருத்துவ கல்வியில் சேர ஒரு மாணவிக்கு, விதிகளை மீறி தாலுக்கா அலுவலகத்தில் இருவித சாதி சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால் பழங்குடியின மாணவர் ஒருவருக்கு கிடைக்க வேண்டிய மருத்துவ இடம். அந்த மாணவிக்கு கிடைத்துள்ளதால், அந்த மாணவிக்கு இரு வித சாதி சான்றிதழ் வழங்கியதை உடனடியாக ரத்து செய்ய வேண்டும். இருவித சாதி சான்றிதழ் வழங்கிய துணை தாசில்தார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இருவித சாதி சான்றிதழ் வழங்கிய தாசில்தார் மீது நடவடிக்கை எடுக்காத மாவட்ட ஆட்சியரை கைது செய்ய வேண்டும் என்பன பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பழங்குடியின மக்கள் 50-க்கும் மேற்பட்டோர் திடீரென சட்டசபையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Advertisment

TWO COMMUNITY CERTIFICAET ISSUE PUDUCHERRY ASSEMBLY PROTEST IN PEOPLES

இதனால் சட்டசபையின் வாயிற்கதவுகள் மூடப்பட்டன. மேலும் மாவட்ட ஆட்சியர் மற்றும் துணை தாசில்தாரை கைது செய்யக்கோரி போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோஷங்களை எழுப்பினர். பின்னர் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் அவர்களை கலையச் செய்தனர். போராட்டம் காரணமாக சட்டசபை வாயிலில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. ஜாதி சான்றிதழ் வழங்கியதை ரத்து செய்யவில்லை என்றால் அதிகாரிகள் மீது காவல் நிலையத்தில் புகார் அளிக்க உள்ளதாகவும், மேலும் அரசுக்கு எதிராக தொடர் போராட்டம் நடத்தப்போவதாகவும் பழங்குடியின மக்கள் எச்சரித்துள்ளனர்.