Skip to main content

பசிக்கொடுமையால் மணலை சாப்பிட்டு பரிதாபமாக உயிரிழந்த இரு குழந்தைகள்...

Published on 04/05/2019 | Edited on 04/05/2019

பசிக்கு சாப்பிட உணவு இல்லாததால் மணலை சாப்பிட்டு இரண்டு குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் ஆந்திராவில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

two children died after consume mud for food in andhrapradesh

 

 

கர்நாடக மாநிலத்தை சேர்ந்த மகேஷ் மற்றும் நீலவேணி தம்பதியினர் தங்களது குழந்தைகளுடன் ஆந்திர மாநிலத்தின் அனந்தப்பூர் பகுதியில் தங்கி வேலை பார்த்து வந்துள்ளனர். கூலி வேலைக்கு செல்லும்  இவர்கள் தற்காலிக கூடாரம் அமைத்து அதில் தங்கிவந்துள்ளனர்.

மிகவும் ஏழ்மை நிலையில் இருந்த இவர்களின் குடும்பத்திற்கு உணவுக்கே கஷ்டப்பட்ட நிலையில் கடந்த ஆறு மாதங்களுக்கு முன் 6 வயதான இவர்களின் மகன் சந்தோஷ் என்ற சிறுவன் பசி தாங்காமல் மணலை சாப்பிட்டு பரிதாபமாக உயிரிழந்தான். அந்த சிறுவனுக்கு இறுதி காரியங்கள் செய்ய கூட பணமில்லாத நிலையில், தங்கள் கூடாரத்திற்கு அருகிலேயே அந்த சிறுவனை புதைத்துள்ளனர்.

இந்நிலையில் நீலவேணியின் சகோதரி மகளான வெண்ணிலா என்ற சிறுமியும் இவர்களுடன் வசித்து வந்துள்ளார். கடந்த 28 ஆம் தேதி வெண்ணிலா பசி தாங்காமல் மணலை சாப்பிட்டுள்ளார். இதனால் அந்த சிறுமியும் உயிரிழந்தார். 6 மாதங்களில் அடுத்தடுத்த இரண்டு குழந்தைகளை இழந்த இந்த தம்பதியின் நிலைமை பொதுமக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து அவர்களிடம் விசாரித்த அனந்தப்பூர் மாவட்ட அதிகாரிகள், குழந்தையை அங்கன்வாடியில் சேர்த்திருக்க வேண்டியதுதானே என கேட்டுள்ளனர். ஆனால் அங்கன்வாடிகள் அனைத்தும் ஆதார் அட்டைகளுடன் இணைக்கப்பட்டுள்ளது. தங்களுக்கு ஆந்திரா மாநிலத்தில் ஆதார் அட்டை இல்லாததால் அங்கன்வாடிகளில் குழந்தைகளை சேர்த்துக்கொள்ளவில்லை என அதிகாரிகளிடம் கண்ணீருடன் அக்குடும்பத்தின் கூறியது அனைவரது மத்தியிலும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.  

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தேர்த் திருவிழா; மின்சாரம் தாக்கி 15 குழந்தைகள் காயம்

Published on 11/04/2024 | Edited on 11/04/2024
Andhra Pradesh Kurnool car festival incident

தேர்த் திருவிழாவின் போது மின்சாரம் தாக்கி 15 குழந்தைகள் காயமடைந்துள்ளனர்.

ஆந்திர பிரதேசம் மாநிலம் கர்னூல் மாவட்டம் சின்ன தெகூர் கிராமத்தில் நடந்த உகாதி விழாவையொட்டி ஆஞ்சநேயர் கோயிலில் தேர்த் திருவிழா நடைபெற்றது. அப்போது தேர் மீது வயர் உரசி தேரில் மின்சாரம் பாய்ந்துள்ளது. இந்த விபத்தில் மின்சாரம் தாக்கியதில் 15 குழந்தைகள் காயமடைந்தனர். இதனையடுத்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக குழுந்தைகள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்தத் தகவலை கர்னூல் கிராமப்புற காவல் நிலைய காவலர் கிரண் குமார் உறுதிப்படுத்தியுள்ளார். தேர்த் திருவிழாவின் போது மின்சாரம் தாக்கி 15 குழந்தைகள் படுகாயமடைந்த சம்பவம் ஆந்திராவில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

முன்னதாக கடந்த மார்ச் மாதம் 8 ஆம் தேதி (08.03.2024) ராஜஸ்தான் மாநிலம் கோட்டா அருகில் உள்ள காளிபஸ்தி என்ற இடத்தில் சிவராத்திரி விழா முன்னேற்பாடுகள் நடைபெற்று வந்தன. அங்கிருந்த சிறுவர்கள் கலசத்தில் தண்ணீர் எடுக்கச் சென்றுள்ளனர். அப்போது சிறுவர்கள் எடுத்துச் சென்ற கொடி கட்டிய இரும்புக் குழாய், உயரழுத்த மின்கம்பி மீது உரசியது. இதனால் சிறுவர்கள் மீது மின்சாரம் பாய்ந்தது. இதில் 17 சிறுவர்கள் படுகாயமடைந்தது குறிப்பிடத்தக்கது. 

Next Story

சென்னை அருகே நிலநடுக்கம்!

Published on 14/03/2024 | Edited on 14/03/2024
Earthquake near Chennai

சென்னை அருகே லேசான நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

ஆந்திர மாநிலம் திருப்பதி அருகே இன்று (14.03.2024) இரவு 8.43 மணியளவில் 3.9 ரிக்டர் அளவில் நில அதிர்வு பதிவாகியுள்ளதாக தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்துள்ளது.  அதாவது திருப்பதியிலிருந்து கிழக்கு வடகிழக்கு திசையில் 58 கி.மீ. தொலைவில் 10 கி.மீ. ஆழத்தில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. சென்னை அருகே உள்ள கும்மிடிப்பூண்டி மற்றும் சூலூர் பேட்டை ஆகிய சுற்றுப் பகுதியில் இந்த நில அதிர்வு உணரப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.