இந்திய ராணுவத்தில் வேகமாக உயரும் கரோனா பாதிப்பு...

two bsf soldiers passed away due to corona

இந்திய எல்லை பாதுகாப்புப் படை வீரர்கள் இரண்டு பேர் கரோனா வைரஸால் பலியாகியுள்ளனர்.

இந்தியாவில் கரோனா வைரஸ் பரவல் திடீரென வேகமெடுத்துள்ள சூழலில், இந்திய ராணுவ பிரிவுகளில் இதன் தாக்கம் அதிகரித்துள்ளது. இந்தியாவில் இதுவரை 53,000க்கும் மேற்பட்டோர் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள சூழலில், 1800க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் கரோனா வைரஸ் சுகாதார ஊழியர்கள், காவல்துறையினர், ராணுவத்தினர் என மக்கள் சேவையில் ஈடுபடும் துறையினர் மத்தியில் தற்போது வேகமாகப் பரவி வருகிறது.

நாடு முழுவதும் 500க்கும் மேற்பட்ட சுகாதாரத்துறை ஊழியர்கள் இதுவரை கரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், ஆயிரத்திற்கும் மேற்பட்ட காவலர்களும் இதனால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் இந்திய எல்லை பாதுகாப்புப் படை வீரர்கள் இரண்டு பேர் கரோனா வைரசால் நேற்று பலியாகியுள்ளனர். மேலும், இந்தியத் துணை ராணுவப்படையில் பெரிய பிரிவான சி.ஆர்.பி.எப்.பில் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் இந்த வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதேபோல எல்லை பாதுகாப்புப் படையில் 193 பேரும் இந்த வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

corona virus crpf
இதையும் படியுங்கள்
Subscribe