கார்த்திக் தர் என்பவர் மும்பையிலுள்ள போர் சீசன்ஸ் என்ற ஸ்டார் ஹோட்டலுக்கு சென்றுள்ளார். அங்கு 2 வேக வைத்த முட்டைகள் சாப்பிட்டுள்ளார். அதற்கு ரூ.1700 கட்டணம் வசூலித்துள்ளது அந்த நட்சத்திற ஹோட்டல். இரண்டு ஆம்லெட்டின் விலையும் அதேதானாம். இதனால் அதிர்ச்சியடைந்த கார்த்திக் தர், ஹோட்டலில் வழங்கிய பில்லை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார். அதற்கு 2 முட்டைகள் விலை ரூ.1700 என்று தலைப்பும் கொடுத்துள்ளார். இதுவும் தற்போது வைரலாகி வருகிறது.

Advertisment

two eggs

முன்னதாக விஸ்வரூபம் படத்தில் நடித்த ராகுல் போஸ் , சண்டிகரிலுள்ள ஜே.டபிள்யூ.மேரியாட் நட்சத்திர ஓட்டலில் தங்கியிருந்திருக்கிறார். அப்போது அவர் 2 வாழைப் பழம் கேட்டுள்ளார். அழகான தட்டில் அவற்றை வைத்து கொடுத்துள்ளனர். ஆனால், ஜிஎஸ்டி.யுடன் சேர்த்து ரூ.442 கட்டணம் வசூலித்துள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த ராகுல் போஸ், அந்தத் தகவலை ட்விட்டரில் வெளியிட்டார். இது பெரும் வைரலானது. இப்பிரச்சனையில் ஜிஎஸ்டியை தவறாக வசூலித்ததாக கூறி ஹோட்டலுக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.