சத்தீஸ்கர் தலைநகர் ராய்ப்பூரில் உள்ள எலக்ட்ரானிக் சிட்டி அருகே நேற்று இரவு இருசக்கர வாகனத்தில் இருவர் வந்துள்ளனர். அப்போது அதே சாலையில் அதிவேகத்தில் வந்த கார் ஒன்று அவர்கள் மீது மோதி அவர்களை தூக்கி வீசியது. இந்த விபத்தில் ஒருவர் சாலையின் ஓரத்தில் தூக்கி வீசப்பட்டார். மற்றொருவர் அந்த காருக்கு அடியில் சிக்கி கொண்டார்.
படுகாயம் அடைந்த அவர்கள் இருவரும் அருகில் இருந்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள். இந்த காட்சிகள் அனைத்தும் அப்பகுதியில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி இருந்தது. அதனை அடிப்படையாக வைத்து காவல்துறையினர் அந்த காரைஓட்டியவரை கைது செய்துள்ளார்கள். இந்த விபத்து காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.