/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/998_143.jpg)
உத்தரகாண்டில் 100 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக இருவர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரகாண்ட், உத்தம் சிங் நகர் மாவட்டத்தில் உள்ள காதிமாவில் உண்டு உறைவிட பள்ளி இயங்கி வருகிறது. இந்தப் பள்ளியில் 120 பெண்கள் உட்பட 250 பழங்குடியின மாணவர்கள் படிக்கின்றனர். பள்ளியில் மாணவ-மாணவிகளுக்குச் சீருடை தைப்பதற்காக ஷகீல் மற்றும் முகமது உமர் பள்ளி நிர்வாகத்தால் பணியமர்த்தப்பட்டு வேலை செய்து வந்தனர். இவர்கள் இருவரும் மாணவிகளின் சீருடையைத் தைக்கும் பணியிலிருந்துள்ளனர். அப்போது, சுமார் 100 மாணவிகளை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக பள்ளியின் பெற்றோர் சங்கத்தலைவர் ராஜ்பீர் சிங் ராணா காவல் துறையினரிடம் புகார் அளித்துள்ளார்.
அதனடிப்படையில், தையல்காரர்கள் ஷகில் மற்றும் முகமது உமர் மீது ஐ.பி.சி 354(ஒரு பெண்ணின் அடக்கத்தைச் சீர்குலைக்கும் நோக்கத்துடன் அவளைத் தாக்குவது) என்ற சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. சுமார் 100 சிறுமிகள் தங்கள் சீருடை அளவீடுகளை எடுக்கும் போது 2 தையல்காரர்களால் தகாத முறையில் நடந்துகொண்டபோது, பள்ளியில் பணிபுரியும் ஊழியர்கள் அதனை தடுக்காமல் பார்த்துக் கொண்டு இருந்துள்ளனர். இதனைத் தொடர்ந்து அந்த மூன்று ஊழியர்களை பள்ளி நிர்வாகம் பணியிடை நீக்கம் செய்துள்ளது.இது போன்ற சம்பவம் ஏற்கனவே இந்த பள்ளியில் நடந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)