2019 ஆம் ஆண்டு விரைவில் முடிவடைய உள்ள நிலையில், இந்த ஆண்டில் இந்திய அளவில் அதிகம் பேசப்பட்ட ஹேஷ்டேக் எது என்பதை குறித்து ட்விட்டர் நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது.
ட்விட்டர் வெளியிட்ட இந்த பட்டியலில், கடந்த ஆண்டில் இந்தியாவில் அதிகமாக பயன்படுத்தப்பட்ட ஹேஷ்டேக்களில் முதலிடத்தை பிடித்திருப்பது #loksabhaelections2019 என்ற டேக் தான். இந்த பட்டியலில் சந்திரயான்-2 இரண்டாவது இடத்தில் உள்ளது. #cwc19, #pulwama, #article370 ஆகிய ஹேஷ்டேக்கள் முறையே மூன்று முதல் ஐந்து வரை உள்ள இடங்களை பிடித்துள்ளன. இந்த பட்டியலை ஆறாவது இடத்தில் #bigil ஹேஷ்டேக் உள்ளது. #diwali, #avengersendgame, #ayodhyaverdict, #eidmubarak ஆகிய ஹேஷ்டேக்கள் முறையே ஏழு முதல் பத்து வரை உள்ள இடங்களை பிடித்துள்ளன.