Advertisment

ஜம்மு - காஷ்மீர் சீனாவின் பகுதியெனக் காட்டப்பட்ட விவகாரம்.. ட்விட்டர் நிறுவனம் விளக்கம்...

twitter on showing Jammu Kashmir as part of China

Advertisment

ட்விட்டர் நேரலை ஒன்றில் ஜம்மு - காஷ்மீர்,சீனாவின் பகுதி எனக் காட்டப்பட்ட விவகாரம் தொடர்பாக அந்நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.

ஞாயிற்றுக்கிழமை ஜம்மு காஷ்மீர் பகுதியிலிருந்து ட்விட்டரில் நேரலை செய்யப்பட்ட ஒரு வீடியோவில் தவறான ஜியோடேக் இடம்பெற்றிருந்தது. அந்த வீடியோவில் தோன்றிய ட்விட்டர் ஜியோடேக்கின்படி ஜம்மு, காஷ்மீர் சீனாவின் பகுதியாகக் காட்டப்பட்டிருந்தது. இந்த விவகாரம் இந்தியர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பை பெற்ற நிலையில், இதுகுறித்து விளக்கம் ஒன்றை அளித்துள்ளது ட்விட்டர் நிறுவனம். அதில், "இந்த தொழில்நுட்ப சிக்கலை ஞாயிற்றுக்கிழமைதான் நாங்கள் கண்டறிந்தோம். இது எவ்வளவு உணர்வுப்பூர்வமான விஷயம் என்பதை நாங்கள் புரிந்துகொண்டு மதிப்பளிக்கிறோம். ஜியோடேக் சம்பந்தப்பட்ட சிக்கலை விசாரிக்கவும் தீர்க்கவும் எங்கள் குழுவினர் விரைந்து நடவடிக்கை எடுத்துள்ளனர்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

twitter china jammu and kashmir
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe