twitter-new-update - tweets feature fleets

ட்விட்டர் இன்று உலக மக்களால் உற்று கவனிக்கப்படும் சமூகவலைத்தளமாக மாறிவிட்டது. இதில் டிரெண்டிங் ஆகும் ஹேஷ்டேக் உலக அளவில் அனைவராலும் பேசப்படுகிறது.

Advertisment

இந்நிலையில் ட்விட்டரில், 'ஃப்ளீட்ஸ் பீச்சர்' என்று அழைக்கப்படும் புதிய வசதியைப் பயனாளர்கள் தேர்வு செய்தால் அடுத்த 24 மணிநேரத்திற்குப் பின் ரீடிவிட், லைக், பின்னூட்டம் என அனைத்தும் தானாகவே மறைவும் என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இத்தாலி ,பிரேசில் ஆகிய நாடுகளைத் தொடர்ந்து இந்தியாவிலும் இவ்வசதி பரிசோதிக்கப்படவுள்ளதாகத் தெரிகிறது. இந்த வசதியை ட்விட்டர் செயலியைப்பயன்படுத்துபவர்களுக்கு மட்டுமே வழங்கபடுவதாகவும், இணையத்தளத்தில் ட்விட்டர் பயன்படுத்துபவர்களால் இதைப் பயன்படுத்த முடியாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisment

இந்நிறுவனம் சமீபத்தில் தான் கரோனா வைரஸ் குறித்த தவறான தகவல்கள் மக்களிடம் பரவுவதைத் தடுக்கும் நோக்கில் உண்மை கண்டறியும் செய்திகளின் லேபிள்களை ட்வீட்டுகளின் அருகே இருப்பது போன்ற வசதி ஒன்றை அறிமுகப்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.