
மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகத்தின் ட்விட்டர் கணக்கு இன்று காலை ஹேக் செய்யப்பட்டுள்ளது. ட்விட்டர் கணக்கை ஹேக் செய்தவர்கள், அந்த கணக்கின் பெயரை எலான் மஸ்க் என மாற்றியதோடு, "சிறப்பான பணி" என சில ட்விட்டுகளையும் பதிவிட்டுள்ளனர். இந்தநிலையில் தற்போது ஹேக் செய்யப்பட்ட ட்விட்டர் கணக்கு மீட்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அண்மையில் பிரதமர் மோடியின் ட்விட்டர் கணக்கு ஹேக் செய்யப்பட்டு, பிட்காயினை இந்தியா அங்கீகரித்துவிட்டது என பதிவிடப்பட்டிருந்ததும், அதன்பின்னர் பிரதமரின் கணக்கு மீட்டெடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.