Advertisment

‘ஒரே நாளில் திருமணம்... ஒரே நாளில் பிரசவம்’ - இரட்டை சகோதரிகள் நெகிழ்ச்சி!

Twin sisters delivered a baby at same day

கேரள மாநிலம் கோட்டயம் அருகே உள்ள தலயோல பரம்பு என்ற இடத்தைச் சேர்ந்தவர் முன்னாள் ராணுவ வீரர் சந்திரசேகர் நாயர். இவரது மனைவி அம்பிகா. இந்த தம்பதிக்கு ஸ்ரீபிரியா, ஸ்ரீலட்சுமி என்ற இரண்டு மகள்கள் உள்ளனர். இருவரும் இரட்டை சகோதரிகள். இருவரும் இணை பிரியாமல் ஒன்றாகவே வளர்ந்தனர்.

Advertisment

இந்நிலையில், இருவரும் வளர்ந்து திருமண வயதை எட்டிய நிலையில், மகள்களின் விருப்பப்படி, மாப்பிள்ளை பார்த்து இருவருக்கும் ஒரே நாளில், ஒரே மேடையில் திருமணத்தை நடத்தினர். அதாவது கடந்த 2020ஆம் ஆண்டு டிசம்பர் 11ஆம்தேதி, ஒரே மேடையில் கோட்டயத்தில் உள்ள ஒரு மண்டபத்தில் திருமணம் நடந்தது. இந்தநிலையில்கர்ப்பமாக இருந்த இருவரும், தாங்கள் பிறந்த மருத்துவமனையிலேயே குழந்தைகளைப் பெற்றுக்கொள்ள விரும்பினர்.

Advertisment

இதையடுத்து இருவரும் அதே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். மதியம் சுமார் 2.20 மணியளவில் ஸ்ரீபிரியா ஒரு பெண் குழந்தையைப் பெற்றெடுத்தார். மாலை 6.45 மணிக்கு ஸ்ரீலட்சுமிக்கும் பெண் குழந்தை பிறந்தது. இரட்டை சகோதரிகள் ஒரே நாளில் குழந்தைகளைப் பெற்றெடுத்தது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. அதேநேரம் பிறந்த குழந்தைகள் 2 பேருக்கும் ஒரே குரூப் ரத்தம் என்பது குறிப்பிடத்தக்கது. அதுவும் 'ஓ' பாசிட்டிவ் ஆகும்.

child delivery twins Kerala
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe