tvk who was involved in conference work Secretary of State is passed away

Advertisment

நடிகர் விஜய் 'தமிழக வெற்றிக் கழகம்' எனும் கட்சியைத் தொடங்கி இருக்கும் நிலையில் கட்சிக்கான முதல் மாநாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. வரும் 27ஆம் தேதி விக்கிரவாண்டியின் வி.சாலை பகுதியில் மாநாடு நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் வெகு தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதற்காக அக்கட்சியின் நிர்வாகிகள் நாள் கணக்கில் விக்கிரவாண்டியிலேயே தங்கி மாநாட்டிற்கான பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அந்த வகையில், தமிழக வெற்றிக் கழகத்தின் புதுச்சேரி மாநிலச் செயலாளர் சரவணன் என்பவரும் கடந்த சில நாட்களாக விக்கிரவாண்டியில் தங்கி மாநாட்டு பணிகளில் ஈட்டுப்பட்டு வந்துள்ளார். இந்த நிலையில் விக்கிரவாண்டியில் இருந்து புதுச்சேரியில் உள்ள வீட்டிற்குத் திரும்பிய சரவணன், தனக்கு லேசாக நெஞ்சு வலிப்பதாகத் தெரிவித்திருக்கிறார்

இதனைத் தொடர்ந்து உறவினர்கள் அருகே உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு சரவணனை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தார். தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாட்டு பணிகளை கவணித்துவந்த மாநில செயலாளர் சரவணன் மாரடைப்பால் உயிரிழந்திருப்பது கட்சியினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.