வருகின்ற கர்நாடகசட்டமன்றதேர்தலில் கர்நாடக மக்கள்பாஜகவுக்கு வாக்களிக்க கூடாது என ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு வேண்டுகோள் வைத்துள்ளார்.

Advertisment

chandrababu naidu

திருப்பதியில் நடந்தபொதுக்கூட்டத்தில் பேசிய அவர்

ஆந்திரமாநில தலைநகர்அமராவதி அமைப்பதற்கு 1500.ரூ கோடி நிதி மட்டும் அளித்த பிரதமர் நரேந்திர மோடி குஜராத்தில் சர்தார் வல்லபாய்பட்டேல் சிலை அமைப்பதற்குரூ.2500 கோடி கொடுத்துள்ளதாக ஆந்திர மாநில முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு குற்றம் சாட்டியுள்ளார். மேலும்2014 ஆம் ஆண்டு இதே இடத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில்நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பு ஆந்திரவுக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கப்படும் என அவர் கொடுத்தவாக்குறுதியைநிறைவேற்ற தவறிவிட்டார் பிரதமர் மோடி எனவேகர்நாடகவில் வசிக்கும் தெலுங்கு மக்கள் சட்டமன்ற தேர்தலில் பாஜகவுக்கு வாக்களிக்க கூடாது எனக்கூறினார்.மேலும் அந்த மேடையில் மோடி பேசிய காணொளியையும் சந்திரபாபு நாயுடுஒளிபரப்பிக்காட்டினார்.