Advertisment

சுரங்கப்பாதை இடிந்து விபத்து; சிக்கிய தொழிலாளர்களுக்கு சூடான உணவு

Tunnel collapse incident ; Hot food for stranded workers

Advertisment

உத்தரகாண்ட் மாநிலம் உத்தரகாசி அருகே உள்ள சில்க்யாராஎன்ற பகுதியில் அமைந்துள்ள யமுனோத்ரி தேசிய நெடுஞ்சாலையில் சுரங்கம் தோண்டும் பணி நடைபெற்று வருகிறது. கடந்த ஞாயிற்றுக்கிழமை (12/11/2023) அன்று காலை வழக்கம்போல் தொழிலாளர்கள் சுரங்கம் தோண்டும் பணியில் ஈடுபட்டனர். அப்போது திடீரென எதிர்பாராத விதமாகச் சுரங்கப்பாதை இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் சிக்கி பணியில் இருந்த 40 தொழிலாளர்கள் சுரங்கத்தின் உள்ளே சிக்கியுள்ளனர். சுமார் 4.5 கி.மீ. நீளமுள்ள சுரங்கப் பாதையில் 150 மீட்டர் இடிந்து விழுந்து விபத்து இந்த நிகழ்ந்துள்ளது.

மீட்புப் பணிகளில் தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்புப் படைகள், தீயணைப்புத் துறையினர் ஈடுபட்டுள்ளனர். இந்த விபத்தில் இதுவரை உயிரிழப்பு ஏதும் இல்லை எனக் கூறப்படுகிறது. அதே சமயம் சரிந்து விழுந்த பாறைகளை சிறிதளவு அகற்றிவிட்டு குழாய்கள் மூலம் சுரங்கத்தில் சிக்கியுள்ள 40 தொழிலாளர்களுக்கு குழாய் மூலம் ஆக்ஸிஜன் மற்றும் திரவ உணவுகள் வழங்கப்பட்டு வருகின்றது என்று தகவல்கள் வெளியாகி இருந்தது.

இந்த நிலையில், இடிபாடுகளில் சிக்கியவர்களுக்கு முதல் முறையாக சூடான உணவு வழங்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது. அதன்படி, அங்கு சிக்கியுள்ள 40 தொழிலாளர்களுக்கு கிச்சடி, டால் உள்ளிட்ட உணவு வகைகள் தரப்பட்டதாகக் கூறப்படுகிறது.

accident uttarkhand
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe