Skip to main content

சுரங்கப்பாதை இடிந்து விபத்து; சிக்கிய தொழிலாளர்களுக்கு சூடான உணவு

Published on 20/11/2023 | Edited on 20/11/2023

 

Tunnel collapse incident ; Hot food for stranded workers

 

உத்தரகாண்ட் மாநிலம் உத்தரகாசி அருகே உள்ள சில்க்யாரா என்ற பகுதியில் அமைந்துள்ள யமுனோத்ரி தேசிய நெடுஞ்சாலையில் சுரங்கம் தோண்டும் பணி நடைபெற்று வருகிறது. கடந்த ஞாயிற்றுக்கிழமை (12/11/2023) அன்று காலை வழக்கம்போல் தொழிலாளர்கள் சுரங்கம் தோண்டும் பணியில் ஈடுபட்டனர். அப்போது திடீரென எதிர்பாராத விதமாகச் சுரங்கப்பாதை இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் சிக்கி பணியில் இருந்த 40 தொழிலாளர்கள் சுரங்கத்தின் உள்ளே சிக்கியுள்ளனர். சுமார் 4.5 கி.மீ. நீளமுள்ள சுரங்கப் பாதையில் 150 மீட்டர் இடிந்து விழுந்து விபத்து இந்த நிகழ்ந்துள்ளது.

 

மீட்புப் பணிகளில் தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்புப் படைகள், தீயணைப்புத் துறையினர் ஈடுபட்டுள்ளனர். இந்த விபத்தில் இதுவரை உயிரிழப்பு ஏதும் இல்லை எனக் கூறப்படுகிறது. அதே சமயம் சரிந்து விழுந்த பாறைகளை சிறிதளவு அகற்றிவிட்டு குழாய்கள் மூலம் சுரங்கத்தில் சிக்கியுள்ள 40 தொழிலாளர்களுக்கு குழாய் மூலம் ஆக்ஸிஜன் மற்றும் திரவ உணவுகள் வழங்கப்பட்டு வருகின்றது என்று தகவல்கள் வெளியாகி இருந்தது. 

 

இந்த நிலையில், இடிபாடுகளில் சிக்கியவர்களுக்கு முதல் முறையாக சூடான உணவு வழங்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது. அதன்படி, அங்கு சிக்கியுள்ள 40 தொழிலாளர்களுக்கு கிச்சடி, டால் உள்ளிட்ட உணவு வகைகள் தரப்பட்டதாகக் கூறப்படுகிறது. 

 

 

 

கடக்கும் முன் கவனிங்க...

கடக்கும் முன் கவனிங்க...

விரிவான அலசல் கட்டுரைகள்

சார்ந்த செய்திகள்

சார்ந்த செய்திகள்

Next Story

தேசிய நெடுஞ்சாலையில் மணல் லாரி விபத்து 

Published on 01/12/2023 | Edited on 01/12/2023

 

Sand truck accident on National Highway

 

வேலூர் மாவட்டம் பள்ளிக்கொண்டாவில் இருந்து சென்னைக்கு மணல் ஏற்றிக்கொண்டு சென்ற டிப்பர் லாரி கொணவட்டம் அருகே சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தபோது பாரம் தாங்காமல் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து, சாலையின் குறுக்கே உள்ள சென்டர் மீடியம் கம்பியில் மோதி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

 

இந்த விபத்தில் லாரியில் இருந்த மணல், சாலையின் இடையே சிதறியதில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சம்பவம் அறிந்து விரைந்து வந்த நெடுஞ்சாலைத்துறை போலீசார் மற்றும் மணல் ஏற்றி வந்த லாரி உரிமையாளர்கள் மணலை ஜேசிபி மூலம் அள்ளி லாரியை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீர் செய்தனர்.

 

இந்த விபத்தில் சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் 1 மணி நேரத்திற்கு மேலாகக் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

 

 

விரிவான அலசல் கட்டுரைகள்

Next Story

உத்தரகாண்ட் சுரங்க விபத்தில் மீட்கப்பட்டவர்கள் வீடு திரும்ப அனுமதி!

Published on 30/11/2023 | Edited on 30/11/2023

 

Uttarakhand mining accident survivors allowed to return home!

 

உத்தரகாண்ட் சுரங்க விபத்தில் மீட்கப்பட்டவர்கள் வீடு திரும்ப அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

 

உத்தரகாண்ட் சுரங்க விபத்தில் மீட்கப்பட்ட அனைவரும், பரிசோதனை நிறைவடைந்ததும் வீடு திரும்ப அனுமதிக்கப்பட்டுள்ளனர். உத்தரகாண்ட் மாநிலம் உத்தரகாசியில் கடந்த 12ஆம் தேதி சுரங்க விபத்தில் சிக்கிக் கொண்ட 41 தொழிலாளர்கள் பத்திரமாக மீட்கப்பட்டு, ரிஷிகேஷிலுள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர். முதல் கட்ட பரிசோதனையில் தொழிலாளர்களுக்கு உடல்நலக் குறைபாடு எதுவுமில்லை எனத் தெரியவந்துள்ளது. மேலும், முழுமையான பரிசோதனைக்கு அவர்கள் உட்படுத்தப்பட்டனர். ரத்தப் பரிசோதனை, கல்லீரல் செயல்பாடு சோதனை, சிறுநீரக செயல்பாடு சோதனை, எக்ஸ்ரே,  இசிஜி உள்ளிட்ட பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.

 

Uttarakhand mining accident survivors allowed to return home!

 

இந்நிலையில் ரிஷிகேஷ் எய்ம்ஸ் மருத்துவமனை மருத்துவர் ரவிகாந்த் “மீட்கப்பட்ட அனைத்து தொழிலாளர்களுக்கும் உடல் ரீதியான காயங்களோ, மன ரீதியான அழுத்தமோ இல்லை. அதனால், அவர்கள் தங்களது  வீடுகளுக்குத்  திரும்ப அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 41 தொழிலாளர்களும் ஏழு வெவ்வேறு மாநிலங்களை சேர்ந்தவர்களாக உள்ளனர்.   அவர்களில், அதிக எண்ணிக்கையிலான தொழிலாளர்கள் ஜார்கண்ட், உத்தரப்பிரதேசம் மற்றும் பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள். அனைவருக்கும் மருத்துவ அனுமதி வழங்கியுள்ளோம். ஜார்கண்ட் மற்றும் ஒரிசாவைச் சேர்ந்த தொழிலாளர்கள் இன்று டிஸ்சார்ஜ் செய்யப்படுவார்கள். அதுபோல், மற்ற மாநிலங்களிலும் நோடல் அதிகாரிகளுடன் தொடர்பில் இருந்து வருகிறோம்” எனத் தெரிவித்துள்ளார்.

 

 

 

 

விரிவான அலசல் கட்டுரைகள்