Trust Management announced Ayodhi Ram needs an hour every day

உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் 2,000 கோடி மதிப்பில் மிகப் பிரம்மாண்டமாக ராமர் கோவில் கட்டப்பட்டுள்ளது. இக்கோவிலுக்காக ஒதுக்கப்பட்ட 70 ஏக்கர் நிலத்தில் 2.7 ஏக்கர் நிலத்தில் மட்டுமே ராமர் கோவில் கட்டப்பட்டது. இதனையடுத்து பிரதமர் மோடி தலைமையில் கடந்த மாதம் 22 ஆம் தேதி ராமர் கோவில் திறப்பு விழா நடைபெற்றது.

Advertisment

அப்போது நடைபெற்ற சிறப்பு பூஜைக்கு பின்பு, குழந்தை ராமர் சிலை கண் திறக்கப்பட்டு பிரதிஷ்டை செய்யப்பட்டது. குழந்தை ராமருக்கு பிரதமர் மோடி முதல் பூஜை செய்து தீபாராதனை காட்டி வழிபாடு செய்தார். இதனையடுத்து கோவில் கருவறை திரைச்சீலை விலக்கப்பட்டு மக்கள் பார்வைக்குத் திறக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து பொதுமக்கள், பக்தர்கள் மற்றும் பல்வேறு தரப்பினரும் ராமரை வழிபாடு செய்து வருகின்றனர்.

Advertisment

கோவிலுக்கு வரும் பக்தர்களின் கூட்டம் தொடர்ந்து அதிகரித்து வருவதால், அதிகாலை 4 மணிக்கு பூஜைகள் தொடங்கப்பட்டு, பக்தர்களுக்கான பொது தரிசனநேரம் காலை 6 மணியில் இருந்து இரவு 10 மணி வரை நீடிக்கப்பட்டது. இந்த நிலையில், அயோத்தி ராமர் கோவில் தினமும் மதியம் ஒரு மணி நேரம் மூடப்படும் என ராமர் கோவில் அறக்கட்டளை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து அயோத்தி ராமர் கோவில் தலைமை பூசாரி ஆச்சார்யா சத்யேந்திர தாஸ் கூறியதாவது, “ராம் லல்லா ஒரு 5 வயது குழந்தை. காலை 4 மணிக்கு தூக்கத்தில் இருந்து எழும் அவரால் நீண்ட நேரம் விழித்துக்கொண்டு இருக்க முடியாது. அதனால் ராமர் கோயில் கதவை மதியம் 12:30 முதல்1:30 வரை மூடவுள்ளோம். அப்போதுதான் அவரால் ஓய்வெடுக்க முடியும்” என்று தெரிவித்தார்.

Advertisment