இரண்டு நாட்கள் அரசுமுறை பயணமாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் இந்த வந்தடைந்தார்.

Advertisment

trump arrived in Ahmedabad

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8252105286"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

Advertisment

இருநாட்டு உறவுகளையும் மேம்படுத்தும் விதமாக ட்ரம்ப் மற்றும் மெலனியா ட்ரம்ப் ஆகிய இருவரும் இரு நாட்கள் இந்தியாவில் பயணம் மேற்கொள்கின்றனர். இதற்காக நேற்று அமெரிக்காவிலிருந்து தனி விமானத்தில் இந்தியா புறப்பட்ட ட்ரம்ப் மற்றும் அவரது மனைவி மெலனியா இன்று அகமதாபாத் வந்தடைந்தனர். வியாபார சந்திப்புகளுக்காக இதற்கு முன் பல முறை இந்தியா வந்துள்ள ட்ரம்ப், அதிபராக பதவியேற்ற பின் இந்தியா வருவது இதுவே முதன்முறையாகும்.

தனி விமானத்தில் அகமதாபாத் விமான நிலையம் வந்தடைந்த அதிபர் டிரம்ப், அவரது மனைவி மெலனியா ஆகியோரை பிரதமர் மோடி நேரில் சென்று வரவேற்றார். ட்ரம்ப் வருகையை ஒட்டி அகமதாபாத் நகரில் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 25,000-க்கும் மேற்பட்ட போலீஸார் குவிக்கப்பட்டு, நகரின் முக்கிய பகுதிகள் ஆளில்லா விமானங்கள் மூலம் கண்காணிக்கப்படுகின்றன. இந்நிலையில், அகமதாபாத் விமான நிலையம் வந்தடைந்த அதிபர் ட்ரம்ப் தனது பீஸ்ட் கார் மூலம் சபர்மதி ஆசிரமத்திற்கு சென்றுள்ளார்.

Advertisment