பளிங்கு கற்களை ஏற்றி வந்த லாரி கவிழ்ந்த விபத்தில் 6 குழந்தைகள் பலி

ராஜஸ்தானில் இருந்து பளிங்கு கற்களை ஏற்றிய 18 சக்கர லாரி ஒன்று பீகார் மாநிலம் வந்து கொண்டு இருந்தது. கோபால்கஞ்ச் மாவட்டம் சரையா நரேந்திர கிராமத்தின் சாலை அருகே வரும் போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து நிலைத்தடுமாறி பக்கவாட்டில் உள்ள பள்ளத்தில் விழுந்து, தலைக்குப்புற கவிழ்ந்தது. இதில் சாலையோரத்தில் நின்று கொண்டிருந்த 6 சிறுவர்- சிறுமிகள் லாரிக்கு அடியில் சிக்கி பலியானார்கள். அனைத்து குழந்தைகளும் 10 முதல் 15 வயதுக்கு உட்பட்டவர்கள். 6 பேர் காயமடைந்தனர். இவர்கள் அனைவரும் ஆடு மேய்த்து கொண்டு இருந்தார்கள்.

fv

பலியானவர்கள் அனைவரும் சரையா நரேந்திர கிராமத்தைச் சேர்ந்த பிஹா நோனியா டோலாவில் வசிப்பவர்கள். அவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக கோபால்கஞ்ச் சதர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

accident
இதையும் படியுங்கள்
Subscribe