fine bil

ஒடிசா மாநிலம் ஜகன்னாத்பூரில்சரக்கு லாரி உரிமையளாராக இருப்பவர்பிரமோத் குமார் ஸ்வைன். இவர்,தனது வாகன உரிமையைப் புதுப்பிப்பதற்காக வட்டாரப் போக்குவரத்துத் துறை அலுவலகத்திற்குச் சென்றுள்ளார். அப்போது அவர், தனக்கு விதிக்கப்பட்ட அபாராதத்திற்கான காரணத்தை அறிந்து அதிர்ந்துள்ளார்.

Advertisment

ஹெல்மெட் போடாததற்காகஅவருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. கடந்த 2020 ஆண்டு டிசம்பரில் அந்தஅபராதம் விதிக்கப்பட்டுள்ளது. லாரி ஓட்ட ஹெல்மெட் தேவையில்லை என்பது அனைவருக்கும்தெரிந்த ஒன்றுதான். ஆனாலும் அவருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இதில், அதிர்ச்சி அளிக்கக்கூடியவிஷயம் என்னவென்றால், பிரமோத் குமார் ஸ்வைன் அபராதம் கட்டிய பிறகே, அவரின் வாகன உரிமை புதுப்பித்துத் தரப்பட்டுள்ளது.

Advertisment

சரக்கு லாரியை ஹெல்மெட் அணியாமல் ஒட்டியதற்குஅபராதம் விதிக்கப்பட்டு, கட்டணம் வசூலிக்கப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவருக்குத் தரப்பட்ட அபராத ரசீது தற்போது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.