Truck collides with bus incident Tragedy that 8 people involved

பேருந்து மீது லாரி மோதிய விபத்த்தில் சிக்கி 8 பேர் பலியான சம்பவம் மக்கள் மத்தியில் சோகத்தை ஏறபடுத்தியுள்ளது.

Advertisment

ஆந்திரா மாநிலம் நெல்லூர் அருகே கவாலி என்ற இடத்தில் நெடுஞ்சாலையில் இன்று அதிகாலையில் லாரி ஒன்று நிறுத்தப்பட்டிருந்தது. இந்த லாரி மீது மற்றொரு லாரி மோதி முதலில் விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் இருந்து மீள்வதற்காக ஓட்டுநர் லாரியை வலது புறமாக திருப்ப முயற்சித்துள்ளார். அப்போது அந்த சாலையில் சென்னை வடபழனியில் இருந்து ஆந்திரா மாநிலம் ஹைதராபாத்திற்கு நேற்றிரவு புறப்பட்ட சுற்றுலா பேருந்து பேருந்து வந்து கொண்டிருந்துள்ளது.

Advertisment

இந்த பேருந்து மீது லாரி மோதி விபத்து நிகழ்ந்துள்ளது. இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினரும், மீட்பு படையினரும் மீட்பு பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே 8 பேர் உயிரிழந்தனர். விபத்தில் சிக்கிய படுகாயம் அடைந்த 15 பேரை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். மேலும் இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.