Advertisment

திரிபுரா மாநிலத்தில் அதிகப்பட்சமாக 81.8 % வாக்குகள் பதிவானது !

17-வது மக்களவை தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு 20 மாநிலங்களில் 91 மக்களவை தொகுதிகளில் நேற்று காலை முதல் மாலை வரை வாக்கு பதிவுகள் நடைப்பெற்றது. இதில் ஆந்திர பிரதேசம் , அருணாச்சல பிரதேசம் மற்றும் சிக்கிம் மாநிலத்தில் சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்கு பதிவுகளும் நடைப்பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.அதே போல் முதற்கட்ட தேர்தலில் பதிவான வாக்குகளின் சதவீதத்தை மாநிலங்கள் வாரியாக பார்க்கலாம்.

Advertisment

1. சிக்கிம் (1) - 69%.

2. மிசோரம் (1) - 60%.

3. நாகலாந்து (1) - 78%.

4. மணிப்பூர் (1) - 78.2%.

5. திரிபுரா (1) - 81.8%.

6. அஸ்ஸாம் (5) - 68%.

7. மேற்கு வங்கம் (2) - 81%

8. அந்தமான் & நிக்கோபார் தீவுகள் (1) - 70.67%.

9. ஆந்திர பிரதேசம் (25) - 66%.

10. சத்தீஸ்கர் (1) - 56%.

11. தெலங்கானா (17) - 60%.

12. உத்தரகாண்ட் (5) - 57.85%.

13. ஜம்மு & காஷ்மீர் (2) - 54.49%.

14. அருணாச்சலப் பிரதேசம் (2) - 66%.

15. பீகார் (4) - 50%.

16. லட்சத்தீவு (1) - 66%.

17. மகாரஷ்டிரா (7) - 56%.

18. மேகாலயா (2) - 67.16%.

19. ஒடிசா (4) - 68%.

20. உத்தரபிரதேசம் (8) - 63.69%.

vote

மாநிலங்கள் வாரியாக இத்தனை சதவீத வாக்குகள் பதிவானதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும முதற்கட்ட மக்களவை தேர்தலில் சுமார் 570 தேர்தல் புகார்கள் வந்ததாகவும் , இதில் 547 புகார்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளதாகவும் இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

Advertisment

polling

மேலும் முதற்கட்ட வாக்கு பதிவில் சுமார் 15 வாக்கு பதிவு இயந்திரங்கள் சேதமானதாக இந்திய தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அதே போல் ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் (வடக்கு) மக்களவை தொகுதிக்கு உட்பட்ட 255, 256 , 257 வாக்கு சாவடி மையத்தில் தங்கள் பெயர் விடுபட்டுள்ளதாக கூறி பொதுமக்கள் வாக்கு சாவடிகள் மையத்தில் வெளியே போராட்டம் நடத்தினார்கள். அப்போது பொது மக்கள் கூறுகையில் 2009 மற்றும் 2014 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் வாக்களித்ததாகவும் , ஆனால் தற்போது எங்கள் பெயர் விடு்பட்டு உள்ளதாகவும் தெரிவித்தனர். ஏற்கெனவே ஆந்திர மாநிலத்தில் மறு தேர்தல் நடத்த வேண்டும் என ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு இந்திய தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் எழுதியது குறிப்பிடத்தக்கது.

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="7632822833"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

இந்த தேர்தலில் வாக்கு பதிவு சதவீதங்கள் கணிசமாக உயர்ந்ததற்கு இந்திய தேர்தல் ஆணையத்தின் இடை விடாத விழிப்புணர்வு நிகழ்ச்சிகளே காரணம் என இளைஞர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் இந்திய தேர்தல் ஆணையத்திற்கு இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் வாழ்த்துக்களையும் , பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொண்டனர்.

loksabha election2019 29 states polls vote election commission
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe