TRIPURA CM

இந்தியாவில் கரோனாபரவல் வேகமெடுத்துள்ளது. கடந்தாண்டை விட கரோனா பரவும் வேகம் தற்போது அதிகரித்துள்ளதாகமத்திய அரசு தெரிவித்துள்ளது. இதனையடுத்துபல்வேறு மாநிலங்கள் இரவு நேர ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. அரசியல்வாதிகள், விளையாட்டு வீரர்கள், சினிமா பிரபலங்கள் உள்ளிட்ட அனைவருக்கும் கரோனாஉறுதி செய்யப்பட்டுள்ளது.

Advertisment

இந்தநிலையில் பாஜகவை சேர்ந்த திரிபுரா மாநில முதல்வர் பிப்லாப் குமார் தேபிற்கு இன்று கரோனாதொற்று செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்துஅவர் மருத்துவர்களின் அறிவுரைப்படி,வீட்டிலேயே தன்னைத் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். இதனைத்தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ள பிப்லாப் குமார் தேப், அனைவரையும் கரோனாதடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றுமாறு கேட்டுக் கொண்டுள்ளார். முதல்வருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதையடுத்து பாஜக தொண்டர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

Advertisment