tripura bjp mla

மேற்கு வங்கத்தில் மாபெரும் வெற்றியுடன் ஆட்சியைத் தக்கவைத்துக்கொண்ட திரிணாமூல் காங்கிரஸ், அடுத்ததாக 2023ஆம் ஆண்டு தேர்தலைச் சந்திக்கவிருக்கும் பாஜக ஆளும் மாநிலமான திரிபுரா மாநிலத்தைக் குறிவைத்து காய்களை நகர்த்திவருகிறது. திரிபுராவில் தேர்தலை எதிர்கொள்வதற்கான பணிகளை அதிகாரப்பூர்வமாகவேதொடங்கி வரும் திரிணாமூல்காங்கிரஸ், ஓரிரு மாதங்களுக்குமுன்பு திரிபுராவின் முன்னாள் அமைச்சர் பிரகாஷ் சந்திர தாஸ், முன்னாள் எம்எல்ஏ சுபால் பவ்மிக், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி (ஏஐசிசி) உறுப்பினர் பன்னா தேப் உள்ளிட்ட ஏழு காங்கிரஸ் தலைவர்களைகட்சியில் இணைத்துக் கொண்டது.

Advertisment

அதனைத்தொடர்ந்து மம்தா பானர்ஜி திரிபுராவில் கட்சியை வலுப்படுத்த'பஞ்ச பாண்டவர்' என்ற பெயரில் குழு ஒன்றை அமைத்தார். இந்தநிலையில்திரிபுரா பாஜக எம்.எல்.ஏவானஆஷிஷ் தாஸ் பாஜகவில் இருந்து விலகி நாளை திரிணாமூல்காங்கிரஸில் இணையவுள்ளார். அதனையொட்டி இன்று அவர் மொட்டையடித்துக் கொண்டார். பாஜகவில் பணியாற்றியதற்குப் பிராயச்சித்தமாக மொட்டையடித்துக் கொண்டதாகவும், திரிணாமூல்காங்கிரஸில் இணைவதற்கு முன்பு தான் சுத்தமானவனாகமாற வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.

Advertisment

சில மாதங்களுக்கு முன்பு, திரிபுராவில் ஆளும் பாஜகவில் இருந்து ஒன்பது எம்.எல்.ஏக்களை திரிணாமூல்காங்கிரஸ் இழுக்க முயன்றதாகவும், இதனையடுத்துபாஜக தலைமை அந்த ஒன்பது எம்.எல்.ஏக்களிடமும்பேச்சுவார்த்தை நடத்தி அவர்கள் கட்சி தாவுவதைத் தடுத்து நிறுத்தியதாகவும் தகவல் வெளியானது இங்கே கவனிக்கத்தக்கது.