Advertisment

சட்டப்பேரவையில் ஆபாசப் படம் பார்த்த பாஜக எம்.எல்.ஏ

tripura assembly bjp mla video issue

இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான திரிபுராவில், கடந்த பிப்ரவரி மாதத்தில் ஒரே கட்டமாக சட்டசபைத்தேர்தல் நடைபெற்றது. மொத்தம் 60 இடங்களைக் கொண்ட திரிபுரா சட்டசபையில், பாஜக 32 இடங்களை கைப்பற்றி 2வது முறையாக ஆட்சியை தக்க வைத்துக் கொண்டது. இந்நிலையில், தற்போது திரிபுரா சட்டசபையில் மாநில பட்ஜெட் தொடர்பான விவாதங்கள் நடைபெற்று வருகிறது.

Advertisment

பொதுவாக சட்டசபைக்கு செல்லும் எம்.எல்.ஏ.க்கள், தங்களது தொகுதி மக்களுக்காக குரல் கொடுப்பார்கள்;தொகுதி பிரச்சனை குறித்து பேசுவார்கள் என்றுநாம் எண்ணுவதே வழக்கம். ஆனால், தற்போது திரிபுரா சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் பாஜக எம்எல்ஏவின் விடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

வடக்கு திரிபுராவைச் சேர்ந்தவர் ஜதப் லால் நாத். இவர் பக்பசா தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்டுமுதல் முறையாக எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், பட்ஜெட் கூட்டத்தொடரில் கலந்துகொண்ட ஜதப் லால், ஆரம்பத்தில் சபாநாயகரும் மற்ற எம்.எல்.ஏ.க்களும் விவாதிப்பதை உன்னிப்பாக கவனித்துக்கொண்டிருந்தார். அதன்பிறகு, சில நிமிடங்கள் கழித்துதன் மடியில் இருந்த செல்போனை ஆன் செய்து ஆபாசப்படம் பார்த்துக்கொண்டிருந்த ஜதப் லால், அதை மேடையின் மேல் வைத்து ஆனந்தமாக ரசித்துக்கொண்டிருக்கிறார். அப்போது, இதை பார்த்துக்கொண்டிருந்த மற்றொரு எம்.எல்.ஏ, ஜதப் லால் செய்யும் வேலைகளை தனது செல்போனில் வீடியோ எடுத்துசோசியல் மீடியாவில் லீக் செய்துள்ளார்.

இந்நிலையில், இந்த வீடியோ காட்சிகள் வைரலானதை அடுத்து, பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதுமட்டுமின்றி இந்த சர்ச்சைக்கு பதிலளித்த திரிபுரா பாஜக தலைவர் ராஜிப் பட்டாச்சாரியா, "இச்சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தப்படும் எனவும், பாஜக எம்.எல்.ஏ ஜதப் லாலிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாகத்தெரிவித்துள்ளார்.

- சிவாஜி

video assembly thiripura
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe