Skip to main content

சட்டப்பேரவையில் ஆபாசப் படம் பார்த்த பாஜக எம்.எல்.ஏ

Published on 31/03/2023 | Edited on 31/03/2023

 

tripura assembly bjp mla video issue

 

இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான திரிபுராவில், கடந்த பிப்ரவரி மாதத்தில் ஒரே கட்டமாக சட்டசபைத் தேர்தல் நடைபெற்றது. மொத்தம் 60 இடங்களைக் கொண்ட திரிபுரா சட்டசபையில், பாஜக 32 இடங்களை கைப்பற்றி 2வது முறையாக ஆட்சியை தக்க வைத்துக் கொண்டது. இந்நிலையில், தற்போது திரிபுரா சட்டசபையில் மாநில பட்ஜெட் தொடர்பான விவாதங்கள் நடைபெற்று வருகிறது.

 

பொதுவாக சட்டசபைக்கு செல்லும் எம்.எல்.ஏ.க்கள், தங்களது தொகுதி மக்களுக்காக குரல் கொடுப்பார்கள்; தொகுதி பிரச்சனை குறித்து பேசுவார்கள் என்று நாம் எண்ணுவதே வழக்கம். ஆனால், தற்போது திரிபுரா சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் பாஜக எம்எல்ஏவின் விடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

வடக்கு திரிபுராவைச் சேர்ந்தவர் ஜதப் லால் நாத். இவர் பக்பசா தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்டு முதல் முறையாக எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், பட்ஜெட் கூட்டத்தொடரில் கலந்துகொண்ட ஜதப் லால், ஆரம்பத்தில் சபாநாயகரும் மற்ற எம்.எல்.ஏ.க்களும் விவாதிப்பதை உன்னிப்பாக கவனித்துக்கொண்டிருந்தார். அதன்பிறகு, சில நிமிடங்கள் கழித்து தன் மடியில் இருந்த செல்போனை ஆன் செய்து ஆபாசப்படம் பார்த்துக்கொண்டிருந்த ஜதப் லால், அதை மேடையின் மேல் வைத்து ஆனந்தமாக ரசித்துக்கொண்டிருக்கிறார். அப்போது, இதை பார்த்துக்கொண்டிருந்த மற்றொரு எம்.எல்.ஏ, ஜதப் லால் செய்யும் வேலைகளை தனது செல்போனில் வீடியோ எடுத்து சோசியல் மீடியாவில் லீக் செய்துள்ளார்.

 

இந்நிலையில், இந்த வீடியோ காட்சிகள் வைரலானதை அடுத்து, பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதுமட்டுமின்றி இந்த சர்ச்சைக்கு பதிலளித்த திரிபுரா பாஜக தலைவர் ராஜிப் பட்டாச்சாரியா, "இச்சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தப்படும் எனவும், பாஜக எம்.எல்.ஏ ஜதப் லாலிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

 

- சிவாஜி

 


 

சார்ந்த செய்திகள்

 

Next Story

“லஞ்சம் லஞ்சம்... எதற்கெடுத்தாலும் லஞ்சம்..” - வீடியோ வெளியிட்டுக் குமுறும் இளைஞர்

Published on 02/07/2024 | Edited on 02/07/2024
man released video  bribes are taken for whatever  Tehsildar  office

நெல்லையைச் சேர்ந்த நபர் ஒருவர் கூட்டுப் பட்டாவில் பெயர் சேர்க்க தாசில்தார் அலுவலகம் சென்றிருக்கிறார். அங்கு அவரிடம் ஒரு லட்சம் லஞ்சம் கொடுத்தால் தான் வேலை நடக்கும் என்று அதிகாரிகள் கூறியதாகச் சொல்லப்படுகிறது.

இது தொடர்பாக அந்த நபர் வீடியோ ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அதில், “தமிழக முதல்வர் அவர்களே வருவாய்த் துறையில் நடக்கும் அநியாயத்தைப் பாருங்கள். எதற்கெடுத்தாலும் லஞ்சம்; லஞ்சம் இல்லாமல் தாசில்தார் அலுவலகத்திற்குள் கால் வைக்கவே முடியாது. அவ்வளவு லஞ்சம் தலை விரித்து ஆடுகிறது. பட்டாவில் சிறிய மாறுதல் செய்ய 50 ஆயிரம் கொடு, ஒரு லட்சம் கொடுன்னு கசக்கி பிழிகிறார்கள்.

நான் ஒரு கூட்டுப் பட்டாவில் பெயர் சேர்ப்பதற்காக விண்ணப்பித்திருந்தேன். அதற்கு ஒரு லட்சம் ரூபாய் கொடுத்தால் மாற்றித் தருகிறோம் என்கின்றனர். நான் பணம் எல்லாம் தரமாட்டேன்; என்னிடம் அனைத்து ஆவணங்களும் சரியாக இருக்கிறது என்று கேட்டதற்கு, நீ எங்க வேண்டுமானாலும் செல் என்கிறனர். 

இது தொடர்பாக ஏகப்பட்ட மனு கொடுத்து, ஒரு வருடமா நடையா நடந்துகிட்டு இருக்கிறேன். ஆனால் இதுவரை எந்த மனுவுக்கும் நடவடிக்கை எடுக்கவில்லை. ரூ.1 லட்சம் லஞ்சமாகக் கொடுத்திருந்தால் ஒரு மணி நேரத்தில் எல்லாவற்றையும் முடித்துக் கொடுத்திருப்பார்கள். தயவு செய்து லஞ்சத்தைச் சட்டமாக்குங்கள்; லஞ்சம் கொடுத்தால்தான் இது முடியும் என்று கூறிவிட்டீர்கள் என்றால், நான் லஞ்சம் கொடுத்துவிட்டுப் போய்விடுவேன். ஆனால் நீங்கள் லஞ்சம் கொடுத்தால் தவறு என்கிறீர்கள். ஆனால் லஞ்சம் கொடுக்காமல் வேலையே நடைபெறுவதில்லை.

முதல்வரே தயவு செய்து பதிவுத்துறை அல்லது வருவாய்த்துறை இரண்டில் எதாவது ஒன்றை மட்டும் வையுங்கள்; எங்களால் இரண்டையும் சமாளிக்க முடியவில்லை. கடன்வாங்கி இடத்தை வாங்குனா, இவர்களுக்கு லஞ்சம் கொடுத்து மாளமுடியவில்லை. லஞ்சத்தைச் சட்டமாக்குங்கள்; இல்லையென்றால் இவர்கள் மீது நடவடிக்கை எடுங்கள்” என மன வேதனையில் தெரிவித்துள்ளார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி வருகிறது. 

Next Story

30 மாதங்களுக்கு முன் போட்ட சபதத்தை நிறைவேற்றிய சந்திரபாபு நாயுடு!

Published on 22/06/2024 | Edited on 22/06/2024
Chandrababu Naidu has fulfilled the vow made 30 months ago!

சமீபத்தில் ஏழு கட்டங்களாக நாடு முழுவதும் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில், பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி மூன்றாவது முறையாக வெற்றி பெற்று ஆட்சி அமைத்துள்ளது. அதே வகையில், மக்களவைத் தேர்தலோடு ஒடிசா, ஆந்திரப் பிரதேசம், சிக்கிம், அருணாச்சலப் பிரதேசம் போன்ற மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தலும் நடைபெற்றது. ஆந்திரப் பிரதேசத்தில் நடைபெற்ற தேர்தலில் ஆட்சியில் இருந்த ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் ஆட்சியைக் கவிழ்த்து தெலுங்கு தேசம் கூட்டணி அபார வெற்றி பெற்றிருந்தது. 175 தொகுதிகள் கொண்ட ஆந்திராவில், தெலுங்கு தேசம் கட்சி 135 இடங்களிலும், அதன் கூட்டணி கட்சிகளான ஜன சேனா கட்சி 21 இடங்களிலும், பா.ஜ.க 8 இடங்களிலும்  வெற்றி பெற்றது.  

சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற சந்திரபாபு நாயுடு ஆந்திர முதல்வராக கடந்த 12ஆம் தேதி பதவியேற்றுக் கொண்டார். இதன் மூலம், ஆந்திரப் பிரதேசத்தில் 4வது முறையாக சந்திரபாபு நாயுடு முதல்வராக பதவியேற்றுள்ளார். இதனையடுத்து, ஆந்திர அமைச்சர்களுக்கு இலாகாக்கள் ஒதுக்கப்பட்டன. 

இந்த நிலையில், ஆந்திர மாநில சட்டப்பேரவையின் 16வது கூட்டத்தொடர் நேற்று (21-06-24) கூடியது. இந்த கூட்டத்தில் தற்காலிக சபாநாயகராக புச்சையா சவுத்ரி தேர்வு செய்யப்பட்டார். இதனையடுத்து முதல்வர் சந்திரபாபு நாயுடு, துணை முதல்வர் பவன் கல்யாண், ஓய்.எஸ்.ஆர் காங்கிரஸ் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி உள்பட அனைத்து எம்.எல்.ஏக்களும் தற்காலிக சபாநாயகர் புச்சையா சவுத்ரி பதவி பிரமாணம் செய்து வைத்தார். 4வது முறையாக முதல்வராக பதவியேற்ற சந்திரபாபு நாயுடு, 30 மாதங்களுக்கு முன்பு போட்ட சபதத்தை நிறைவேற்றியுள்ளார்.

Chandrababu Naidu has fulfilled the vow made 30 months ago!

கடந்த 2021ஆம் ஆண்டு நவம்பர் 21ஆம் தேதி ஆந்திர மாநில சட்டப்பேரவை கூட்டத்தொடர் கூடியது. அப்போது ஆட்சியில் இருந்த ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏக்கள், சந்திரபாபு நாயுடு மற்றும் அவரது குடும்பத்தினரை பற்றி அவதூறாக பேசியதாகக் கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த சந்திரபாபு நாயுடு, “ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸின் இந்த சபையில், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளுக்கு  மரியாதை இல்லை. இனிமேல் இந்த சட்டமன்றத்துக்குள் வர மாட்டேன். அப்படி வந்தால், நான் முதல்வராகப் பதவியேற்ற பிறகுதான் மீண்டும் சபைக்கு வருவேன்” என்று சபதமிட்டு அவையை விட்டு வெளியேறினார். அன்று முதல், இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக ஆந்திரா சட்டமன்றத்துக்குள் சந்திரபாபு நாயுடு காலடி எடுத்து வைக்கவில்லை. 

30 மாதங்களுக்கு சட்டமன்றத்துக்குள் வராத சந்திரபாபு நாயுடு, முதல்வராகப் பதவியேற்ற பின் சட்டப்பேரவைக்குள் நுழைந்துள்ளார். இதைத் தெலுங்கு தேசம் கட்சியினர் ஆரவாரமாக கொண்டாடி வருகின்றனர். மேலும், ஏற்கெனவே சந்திரபாபு சபதம் எடுத்த வீடியோவையும், தற்போது சட்டப்பேரவைக்குள் முதல்வராக நுழையும் வீடியோவையும், இணைத்து தெலுங்கு தேசம் கட்சியினர் சமூக வலைத்தளங்களில் வைரலாக்கி வருகின்றனர்.