குவைத்தில் வேலை பார்க்கும் கணவர் உத்தர பிரதேசத்திலிருக்கும் மனைவியை வாட்ஸ் அப் மூலம் முத்தலாக் சொல்லி விவாகரத்து செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

triple talaq

உபியிலுள்ள முஸாபர்பூரில் பிஹாரி கிராமத்தைச் சேர்ந்த இசுலாமிய பெண் ஒருவரை அவரது கணவர் குவைத்தில் இருந்தபடி வாட்ஸ் அப் மூலம் முத்தலாக் கூறி விவாகரத்து செய்துள்ளார்.

அந்த பெண்ணின் கணவன் வீட்டார் 5 லட்சம் ரூபாய் வரதட்சணை கேட்டு துன்புறுத்தியதாக கடந்த மே மாதம் வழக்கு பதிவு செய்துள்ளார். இந்நிலையில் நேற்று அந்த பெண் உள்ளூர் காவல் நிலையத்திற்கு வந்து தனது கணவர் தன்னை குவைத்தில் இருந்தபடி வாட்ஸ் அப் மூலம் விவாகரத்து செய்ததாக கூறி புகார் அளித்துள்ளார்.

Advertisment

இது சட்டவிரோதம் என அவர் தனது புகாரில் தெரிவித்துள்ளார். இதையடுத்து கணவர் மற்றும் குடும்பத்தினர் மீது உத்தர பிரதேச போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சமீபத்தில்தான் முத்தலாக் தடை சட்டம் அமலுக்கு வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.